• Apr 12 2025

'குட் பேட் அக்லி' படத்திற்கு தட்டி தூக்கப்பட்ட ஜெயிலர் நடிகர்! யார் தெரியுமா? மரண மாஸ் அப்டேட்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகில் முன்னணி ஹீரோவாக திகழும் அஜித் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா மற்றும் பிரியா பவானி ஷங்கர் என பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். அத்துடன் விடாமுயற்சி படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் பேசப்படுகிறது.

இதைத்தொடர்ந்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார் அஜித். இந்த படம் அஜித்திற்கு 63வது படமாகும். இந்த படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில்,  'குட் பேட் அக்லி' படத்தில் நடிப்பதற்கு தெலுங்கு நடிகர் சுனில் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என தற்போது தகவல் வெளியாகி உள்ளது.


தமிழ் சினிமாவில் ஜப்பான், ஜெயிலர், மார்க் அன்டனி ஆகிய படங்களில் சுனில் நடித்துள்ளார்.

'குட் பேட் அக்லி' படத்தில் இன்னும் சில பான் இந்தியா நடிகர்கள் இணைய உள்ளதோடு, இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் மற்றும் ஜப்பானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement