• Dec 25 2024

ஏட்டிக்கு போட்டியாக படங்களை வரிசைகட்டி இறக்கும் இயக்குநர்கள்! ரஜினியின் அடுத்த சம்பவம் லோடிங்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவானது தான் ஜெயிலர் திரைப்படம்.

கடந்த ஆண்டு வெளியான இந்த திரைப்படம், மிகப்பெரிய வெற்றியை பெற்று,  உலக அளவில் 600 கோடிக்கு மேல் வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது.

இதை தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பு இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தது.


ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்த நடிகை மிர்ணா, சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தான் நெல்சன் அவர்களிடம்பேசும் போது,  ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய திரைக்கதை அமைக்கும் பணிகளில் இருப்பதாக தன்னிடம் தெரிவித்ததாக கூறினார்.


இந்த நிலையில், இயக்குநர் நெல்சன் 'ஜெயிலர் 2' படத்திற்கான பணிகளை ஆரம்பிக்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ரஜினிகாந்த் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பதோடு, ஜெயிலர் முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகமும் இருக்கும் என கூறப்படுகின்றது.

இதேவேளை, இந்த ஆண்டில் வெளியான படங்கள் தோல்வியை தழுவிய நிலையில், கமல், அஜித், விஜய், ரஜினி என முன்னணி நடிகர்களின் அடுத்தடுத்த படங்கள் குறித்த அப்டேட், ரிலீஸ் என்று தமிழ்  சினிமா தற்போது பரபரப்பாக பேசப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement