• Apr 19 2025

"காவாலயா.." ஹிட்டை முறியடிக்கப் போராடும் பாலிவுட் நடிகை..! யார் தெரியுமா?

subiththira / 2 days ago

Advertisement

Listen News!

90களின் பின்னணியை கொண்டு தயாராகும் ரெட்ரோ படத்தில் பூஜா ஹெக்டே வித்தியாசமான லுக்கில் நடித்து ரசிகர்களைக் கவரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அந்தவகையில் சமீபத்தில் வெளியான ஒரு பாடலில் பூஜா ஆடிய நடனம் தற்பொழுது இணையத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ந்த ஒரு பேட்டியில் பூஜா ஹெக்டே ‘கூலி’ படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, “கூலி படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியுள்ளேன். அது எனக்கு மிகவும் ஸ்பெஷலான அனுபவமாக இருக்கின்றது என்றதுடன் ரஜினிகாந்த் சாருடன் பணியாற்றியது என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று என்றார். மேலும் இந்த பாடல், தமன்னா நடித்த "காவாலயா.." பாடல் போன்று கிடையாது முற்றிலும் வேறுபட்டது." எனவும் கூறியிருந்தார்.


பூஜா ஹெக்டே கூலி படத்தில் நடனமாடும் பாடல், ஒரு மாஸ் கலவையாக இருக்கும் என படக்குழுவிலிருந்து தகவல்கள் வெளியாகியிருந்தன. மேலும் தமன்னா ‘ஜெயிலர்’ படத்தில் நடித்த "காவாலயா.."  பாடல் வைரலானது போல, இந்தப் பாடலும் வைரலாவது உறுதி எனவும் கூறியிருந்தார்.

தென்னிந்திய ரசிகர்களிடம் தீவிரமான வரவேற்பு இல்லாமல் இருந்தாலும், ‘பீஸ்ட்’ மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திய பூஜா ஹெக்டே, தற்போது சரியான கதைகளையும், வித்தியாசமான கதாப்பாத்திரங்களையும் தேர்வு செய்து வருகின்றார். அந்தவகையில் ‘கூலி’ படத்தில் பூஜா ஹெக்டே நடனமாடும் பாடலின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானவுடனே இன்ஸ்டாகிராமில் டிரெண்டாகியுள்ளது.

Advertisement

Advertisement