• Jun 10 2026

அட்லீ-சன் பிக்சர்ஸ் கூட்டணியில் புதிய படம்… ஹீரோயினி யார் தெரியுமா..?

shali / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவின் இரண்டு பெரிய சக்திகள் ஒன்று சேர்ந்திருக்கின்றன. ஒருபுறம் ‘ஜவான்’ வெற்றியைத் தந்த இயக்குநர் அட்லீ, மற்றொரு புறம் நம்ம தமிழ் சினிமாவின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ். இவர்கள் இணைந்து தயாரிக்கும் புதிய பிரமாண்ட திரைப்படத்தில், பாலிவுட் ஸ்டார் தீபிகா படுகோன் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் தற்போது அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.


இந்த செய்தி, தமிழ்-ஹிந்தி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் மூலம், தீபிகா படுகோன் – அட்லீ – அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகவிருக்கும் படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

அட்லீ இயக்குநராக அறிமுகமாகியதில் இருந்து, ராஜா ராணி, மெர்சல், பிகில் என அவரது படங்கள் மாஸ், எமோஷன் அனைத்தையும் கலந்து கொண்ட வெற்றிப் படங்களாகவே இருந்தன. கடந்த ஆண்டு ஷாருக்கானுடன் ‘ஜவான்’ திரைப்படம் மூலம் ஹிந்தி சினிமாவிலும் இடம் பிடித்து, பில்லியன் வசூல் கிளப்பிய இயக்குநராக வலம்வந்தார்.


இப்படத்தை உருவாக்கும் சன் பிக்சர்ஸ், ஏற்கனவே ,துணிவு, அண்ணாத்த, பீஸ்ட் போன்ற படங்களை தயாரித்தது. தற்போது பாலிவுட் ஹீரோயினை தமிழ் படத்துக்குள் கொண்டு வருவது, இந்திய சினிமாவில் இடம்பெறும் புதிய முயற்சியாகப் பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement