• Dec 25 2024

Most popular male star யார் தெரியுமா! ஷாருக்கான், விஜய், ரஜனியை ஓரங்கட்டிய ரெபெல் ஸ்டார்!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

ஒவ்வொரு வருடமும் இந்தியாவின் மிக பிரபலமான நடிகர்கள் யார் என்ற பட்டியல் வெளியாகும் அதில் விஜய், ஷாருக்கான், சால்மன் கான், சூர்யா, மகேஷ் பாபு உட்பட பல பிரபலங்கள் இருப்பார்கள். இந்த வகையில் Ormax நிறுவனம் நேற்று “Ormax Stars India Loves: Most popular male film stars in India (Oct 2024)” பட்டியலை வெளியிட்டது.


இந்தியாவின் மிகவும் பிரபலமான நடிகராக பாலிவுட் நடிகர்களை பின்னுக்கு தள்ளி தென்னிந்திய நடிகர் ஒருவர் இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். பான் இந்தியாவின் நடிகராக வலம் வரும் நடிகர் பிரபாஸ் தான் இந்த வருடத்திற்க்கான Most popular male film star லிஸ்ட்டில் முதலில் இருக்கிறார்.


நடிகர் விஜய் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்., அதைத் தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் 4-வது இடத்திலும், அஜித் குமார் 5-வது இடத்திலும் உள்ளனர்.


நடிகர் அல்லு அர்ஜுன் 6-வது இடத்திலும், மகேஷ் பாபு ஏழாவது இடத்திலும், சூர்யா 8-வது இடத்திலும், ராம் சரண் 9வது இடத்திலும் உள்ளனர். நடிகர் சல்மான் கான் 10வது இடத்தில் இருந்தார். பிரபல நச்சத்திரங்களி ஓரங்கட்டி இந்த முறை பிரபாஸ் முன்னிலைக்கு வந்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.


இந்திய சினிமாவில் புரட்சியை ஏற்படுத்திய பாகுபலி திரைப்படம் மூலம் பிரபாஸ் முதல் பான் இந்தியா ஸ்டாராக உயர்ந்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார். இதனால் ரெபெல் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார் அதன் பின்னர் பல வெற்றி படங்களை கொடுத்தார். சலார் 2 , கல்கி 2898 ஏடி ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

 

Advertisement

Advertisement