• Apr 07 2026

விஜய் டிவி பில்டப் பண்ணிய அந்த ஓஜி ஆங்கர் யார்.? குக் வித் கோமாளியில் புதிய திருப்பம்

Aathira / 4 days ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ், குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதில் ஒரு சீசன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அதன் ஒவ்வொரு சீசனும் தொடர்ச்சியாக மக்களின் அமோக ஆதரவை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது.

அந்த வகையில், 2019 ஆம் ஆண்டு ஒரு ஃபன் நிகழ்ச்சியாக ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. இது குக்கிங் ஷோவாக இருந்தாலும், அந்த ஷோவில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது. சமைக்கவே தெரியாத கோமாளிகளை வைத்து அவர்கள் செய்யும் அலப்பறைகள் அருமையாக இருக்கும். இதுவரையில் இந்த நிகழ்ச்சியில் 6 சீசன்கள் முடிவடைந்துள்ளன.

இந்த நிகழ்ச்சியின் முதல் நான்கு சீசன்களும் சக்கை போடு போட்டன. அதற்கு காரணம், அந்த சீசன்களை மீடியா மேஷன்ஸ் நிறுவனம் தயாரித்தது. அடுத்த சீசனிலிருந்து அந்த நிறுவனம் விலகவே, அதனுடன் வெங்கடேஷ் பட் அந்த நிகழ்ச்சியிலிருந்து விலகி சன் டிவிக்கு மாறினார். இது பலருக்கு அதிர்ச்சியை அளித்தது.


மேலும், இறுதியாக இடம்பெற்ற ஆறாவது சீசனில் மணிமேகலைக்கும் பிரியங்காவுக்கும் சண்டை ஏற்பட்டது. அதனால் மணிமேகலை அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இது மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியது.

இந்த நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் மேலும் ஒரு புதிய நடுவராக நடிகை ரோஜா களம் இறங்கியுள்ளார். அதேபோல் இந்த சீசனில் தொகுப்பாளரும் மாற்றப்பட்டுள்ளார்.

அதன்படி, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட ஷாலினி சோயா தற்போது இந்த சீசனில் தொகுப்பாளராக களம் இறங்கியுள்ளார்.


அத்துடன், அவர் ரக்ஷனுடன் இணைந்து பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரக்ஷன் விலகியதால், அவருக்கு பதிலாக ஓ.ஜி. ஆங்கர் ஒருவர் வருகிறார் என விஜய் டிவி பில்ட்அப் கொடுத்தது. இறுதியில் அது மாகாபா ஆனந்த் என தெரியவந்துள்ளது.

அதே நேரத்தில், இதுவரை சிங்கிள் குக்குகளுடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, இம்முறை டபுள் குக்குகளுடன் நடைபெற உள்ளது. அதில் கானா வினோத் தனது மனைவியுடன் மற்றும் பாடகர் மனோ தனது மனைவியுடன் ஒரு டீமாக களம் இறங்கியுள்ளனர்.

இதனால் இந்த சீசன் முழுக்க முழுக்க ஃபன்னாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement