தமிழில் வெளியான கோலமாவு கோகிலா படத்தில் காமெடி நடிகராக அறிமுகமானவர் தான் ரெடின் கிங்ஸ்லி. அதன் பின் எல்கேஜி, ஜாக்பாட், நெற்றிக்கண், குர்கா, சந்தானத்தின் A1 போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.
இதைத்தொடர்ந்து, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படம் இவரை உச்சத்துக்கே கொண்டு சென்றது. அதன் பின்னரும் விஜய் சேதுபதியுடன் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல், விஜயின் பீஸ்ட், டிடி ரிட்டர்ன்ஸ், நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் என தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார்.
ஆரம்பத்தில் இவர் நடிப்பு மீது இருந்த ஆர்வத்தால் டான்ஸ் கற்றுக்கொண்டுள்ளார். அவள் வருவாளா படத்தில் குரூப் டான்சர்களில் ஒருவராக நடனமாடியுள்ளார். அதன் பின் பல ஆண்டுகளாக திரைக்குப் பின்னால் இருந்த இவரை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது இயக்குநர் நெல்சன் தான்.

2023 ஆம் ஆண்டு நடிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர் அரண்மனைக்கிளி, திருமகள், எங்க வீட்டு மீனாட்சி, ஆனந்த ராகம் போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். அதேபோல் வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்துள்ளார்.
இந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. தனது குழந்தையின் புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைத்தளங்களில் சங்கீதா பதிவிட்டு வருகிறார்.
இந்த நிலையில், ரெடின் கிங்ஸ்லி – சங்கீதா தம்பதியினருக்கு பிறந்த பெண் குழந்தைக்கு ஒரு வயது நிறைவடைந்துள்ளது. இதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளனர். தற்போது குழந்தைக்கு பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Listen News!