உமாபதி ராமையா இயக்கத்தில் நட்டி நட்ராஜ் நடிப்பில் ரிலீஸுக்கு தயாராகியுள்ள திரைப்படம் தான் ‘டிஎன் 2026’ படம். இந்த படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
ஏற்கனவே தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா, தனது அப்பாவை வைத்து ராஜா கிளி படத்தை இயக்கியிருந்தார். தற்போது நட்டி நட்ராஜை வைத்து அரசியல் படம் ஒன்றை எடுத்துள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் களம் பரபரப்பாக இருக்கும் நிலையில், ரவி மோகனின் 'கராத்தே பாபு' மற்றும் விஜயின் 'ஜனநாயகன்' படங்கள் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் நட்டி நட்ராஜ் நடிக்கும் படம் வெளியாக உள்ளது.
அரசியல் பின்னணியுடன் காமெடி கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சாண்டி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தை கண்ணன் ரவி குழு மற்றும் கந்தாரா ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. இதற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் எம்.எஸ். பாஸ்கர், தம்பி ராமையா, சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், ஸ்ரீதா ராவ், விஜி சந்திரசேகர், கிங்காங், தேவி மகேஷ், ஜான் விஜய், ஆடுகளம் நரேன், கிங்ஸ்லி மற்றும் இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், “டிஎன் 2026 தங்க நட்சத்திரம்” திரைப்படத்தின் டீசர் நேற்றைய தினம் வெளியாகியுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள வசனங்கள் மற்றும் நட்டி நட்ராஜின் பாடி லாங்குவேஜ் ஆகியவை விஜயை சுட்டிக்காட்டும் வகையில் அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். எனவே இது விஜயின் பயோபிக் ஆக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
மேலும், படத்தில் நட்டி நட்ராஜ் நரைத்த தாடியுடன் வரும் லுக் மற்றும் அவருக்காக வைக்கப்பட்ட கட்அவுட், புலி படத்தில் விஜய்க்கு வைக்கப்பட்ட கட்அவுட் போலவே உள்ளது எனவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Listen News!