• Dec 26 2024

வனிதாவைத் தாக்கிய அந்த நபர் யார் தெரியுமா?- போலீஸார் சிசிடிவி காட்சியை வைத்து கண்டுபிடித்து விட்டனரா?- கொந்தளிக்கும் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்போது நடைபெற்றுவருகிறது. இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறுவார் என்று கூறப்பட்ட நிலையில் நேற்றைய தினம் விஜே ப்ராவோ பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதனை அடுத்து இன்றைய தினம் அக்ஷயா வெளியேறவுள்ளார்.

மேலும் வீட்டை விட்டு எவிக்டாகிச் சென்ற, விஜய் வர்மா மீண்டும் வைல்ட் காட் என்ட்ரியாக உள்ளே வந்துள்ளார். இப்படி நிகழ்ச்சி சுவாரஸியமாகப் போய்க் கொண்டிருந்தாலும் போட்டியாளரான பிரதீப் ஆண்டனிக்கு ரெட்காட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட விடயம் தான் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக உள்ளது.


 பிரதீப்பை அப்படி அனுப்பதியதற்கு பலரும் தங்களது கண்டனத்தையும், எதிர்ப்பையும் பதிவு செய்தனர். முக்கியமாக கமல் ஹாசனுக்கு எதிராக பல கருத்துக்கள் எழுந்தன. இந்நிலையில், தன்னை பிரதீப்பின் ஆதரவாளர் தாக்கிவிட்டார் என்று வனிதா விஜயகுமார் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார்.

அந்தபதிவில், ”நான் செய்யும் பிக்பாஸ் விமர்சனத்தையும், இரவு உணவையும் முடித்துவிட்டு வீடு திரும்ப இருந்தேன். எனது காரை என் தங்கை சௌமியா வீட்டின் அருகே நிறுத்தியிருந்தேன்.காரை எடுப்பதற்காக அருகே சென்றபோது அங்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வந்தார். அவர் பிக்பாஸ் பிரதீப் ஆண்டனியின் ஆதரவாளர். வந்தவர் என்னை கடுமையாக தாக்க தொடங்கினார். மேலும், ரெட் கார்டு கொடுக்குறீங்களா; நீ அதுக்கு வேற சப்போர்ட் என கூறி முகத்தில் அடித்தார்.

 வலியில் நான் கத்தினேன். எனது முகத்தில் ரத்தம் வழிந்தது. இது நடக்கும்போது இரவு 1 மணி. அப்போது அங்கு யாருமே இல்லை. நான் எனது தங்கையை கீழே அழைத்தேன். இதை உடனடியாக காவல் நிலையத்தில் சொல்லும்படி கூறினாள்.ஆனால் நான் இதில் நம்பிக்கை இழந்துவிட்டேன் என்றும் தெரிவித்தார்.


இதனால் ரசிகர்கள் உங்களை அடித்தது யாரோ என்றால் போலீஸ் ஸ்டேசன் போயிருக்க வேண்டியது தானே, இதில் ஏதோ உள்குத்து இருக்கு என்று கூறுகின்றனர். மேலும் வனிதாவின் இந்த விவகாரம் அறிந்த போலிஸார்இந்த சம்பவம் நடந்த லொகேஷனைஅனுப்புமாறு கேட்டுள்ளனராம்.இதனால் அந்த இடத்தில் உள்ள சிசிடிவியை வைத்து வனிதாவை அடித்தது யார் என்று அறிய வாய்ப்பு இருப்பதாக கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement