• Dec 26 2024

யோகிபாபு போல இருக்கும் இந்த நபர் யார் தெரியுமா?- அடடே அச்சு அசலாக அப்பிடியே இருக்கின்றாரே....

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் தான் யோகிபாபு.காமெடி நடிகராக மட்டுமல்லாது கதாநாயகனாகவும் பல படங்களில் நடித்து வருகின்றார்.தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

கடந்த வாரம் இவரது நடிப்பில் குய்கோ என்னும் திரைப்படம் வெளி வந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.இதை தொடர்ந்து அயலான், அரண்மனை 4, தளபதி 68, கங்குவா படங்களிலும் நடித்து வருகின்றார். அண்மையில் தன்னுடைய மகளின் பிறந்தநாளை கோலாகமாக் கொண்டாடியிருந்தார்.


மேலும் முருகன் பக்தனான இவர் அடிக்கடி முருகன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்வதையும் வழக்கமாக வைத்துள்ளார்.பொதுவாக உலகில் ஒருவரை போல் 7 பேர் இருப்பார்கள் என சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறோம்.


அதுவும் சினிமா பிரபலங்களைப் போல இருக்கும் பலரைப் பார்த்திருக்கின்றோம்.அப்படி சமீபத்தில் அனைவரையும் மணிபாலன் என்பவர் ஆச்சிரப்பட்ட வைத்துள்ளார். நடிகர் யோகிபாபு போல இவர் இருப்பதால் ரசிகர்கள் பலரும் யோகிபாபு தான் இவர் என நினைத்து புகைப்படங்களை எடுத்துக் கொள்வதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.


Advertisement

Advertisement