• Dec 25 2024

இவங்க இல்ல ஹீரோ,ஹீரோயின்,வில்லன்! முதலில் நடிக்க இருந்த புஷ்பா டீம் யார் தெரியுமா!

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் இன்று புஷ்பா-2 திரைப்படம் வெளியாகியுள்ளது. தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் ,நடிகை ராஷ்மிகா மந்தனா,நடிகர் பகத் பாசில் நடித்துள்ள இந்த திரைப்படத்தினை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.புஷ்பா 2 தற்போது கலவையான விமர்சனத்தினையும் பெற்று வருகிறது. 


இப்படத்தின் முதல் பாகத்தில் நடித்ததற்காக அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.  இதன் பாகம் இரண்டு தமிழ். தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் சுமார் 12 ஆயிரத்திற்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இவ்வாறு இருக்க புஷ்பா படத்தில் நடிக்க இயக்குனர் சுகுமார் முதலில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா. பகத் ஆகியோரை அணுகவில்லையாம்.


அவர்களுக்கு முன்னர் இப்படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் மகேஷ் பாபுவை இயக்குனர் தேர்ந்தெடுத்திருக்கிறார். ஆனால், அவர் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க விரும்பாததால் இயக்குனர் அல்லு அர்ஜுனை அணுகி இருக்கிறார். ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்துக்கு முதலில் சமந்தாவை அணுகி இருக்கிறார். ஆனால் அவர் கிராமிய பெண் வேடத்தில் நடிக்க மறுத்ததனால் ராஷ்மிக்காவை அணுகியுள்ளார். 

d_i_a"


அதேபோல வில்லன் கதாபாத்திரத்துக்கு விஜய் சேதுபதியை கேட்டுள்ளார். ஆனால் அவர் அப்போது வில்லனாக நடிக்க விரும்பாததால் பஹத் பஷில் நடித்துள்ளார். இப்படி வந்த வாய்ப்பை பயன்படுத்தி தற்போது புஷ்பா திரைப்படத்தில் அருமையாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்கள் புஷ்பா டீம்.  

Advertisement

Advertisement