• Dec 26 2024

ரோஜா சீரியல் அர்ஜுன் சார் நடிக்க போகும் புதிய சீரியல்... கதாநாயகி யார் தெரியுமா?

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரோஜா சீரியல் அதிக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வந்தது. இந்த சீரியல் கடந்த 2022ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இந்த சீரியலில் ஹீரோவாக சிபு சூர்யன் என்பவர் நடித்திருந்தார். மேலும் கதாநாயகியாக பிரியங்கா நல்கெரி நடித்திருந்தார்.


ரோஜா சீரியல் முடிவுக்கு வந்த நிலையில், ஹீரோ சிபு சூர்யன் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா 2 சீரியலில் நடித்து வந்தார். அதே போல் கதாநாயகி பிரியங்கா நல்கெரி ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நள தமயந்தி சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.


இதில் விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா 2 முடிவுக்கு வர, சிபு சூர்யன் அடுத்ததாக இதுவரை எந்த ஒரு சீரியலிலும் நடிக்கவில்லை. இதனால் அவருடைய ரசிகர்களும் சற்று வருத்தத்தில் இருந்தனர். இந்நிலையில், தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய சீரியலில் ஹீரோவாக நடிக்கவுள்ளாராம் சிபு சூர்யன். 


இந்த சீரியலில் கதாநாயகியாக நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் துணை நடிகையாக நடித்திருந்தா வைஷ்ணவி தான்  நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த சீரியல் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஜீ தமிழில் விரைவில் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement