• Apr 17 2025

எதிர்நீச்சல் சீரியலுக்கு ஸ்கிரிப்ட் எழுதியது யார் தெரியுமா? அந்த நடிகைக்கு இவ்வளவு டேலண்ட் இருக்கா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவி தொலைக்காட்சியில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்றுதான் எதிர்நீச்சல். 

ஒரு கூட்டுக் குடும்பமாக வாழும் ஒரு வீட்டில் ஆணாதிக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், தான் படிக்கவில்லை என்றாலும் படித்த பெண்களை திருமணம் செய்து தங்களது காலடியில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று படித்த பெண்களை தேடி திருமணம் செய்து கொள்கிறார்கள்.

இந்த ஆணாதிக்கம் நிறைந்த வீட்டிற்கு மத்தியில் அந்த மருமகள் மற்றும் அவரது குழந்தைகள் சந்திக்கும் பிரச்சினைகள் தான் இந்த சீரியலின் கதையாக நகருகிறது.


இந்த சீரியலில் தர்சினியின் கடத்தல் விவகாரம் முடிவுக்கு வந்த பிறகு, தற்போது அவருக்கு கல்யாணம் செய்து வைப்பதில் குணசேகரன் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், எதிர்நீச்சல் சீரியலின் ஸ்கிரிப்ட் எழுதியது ஒரு பிரபல சீரியல் நடிகை தான் என தகவல் வெளியாகியுள்ளது.


அதாவது, பல சீரியல்கள் மற்றும் படங்களில் நடித்து இருக்கும் நடிகை ஶ்ரீ வித்யா தான் எதிர்நீச்சல் கதையை எழுதி உள்ளாராம். 

அத்துடன், ஜில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள ஶ்ரீ வித்யா, இதுவரை ஐந்து சீரியல்களுக்கு கதை எழுதி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement