தனுஷ் இயக்கி தயாரித்துள்ள " நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் " திரைப்படம் பெப்ரவரி 21 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. பவிஷ்,அனிகா சுரேந்திரன்,பிரியா பிரகாஷ் வாரியர்,மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன்,ரபியா கட்டூன்,ரம்யா ரங்கநாதன் போன்ற பலர் நடித்துள்ள இப் படத்திற்கு ஜி .வி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
"ராஜன்" திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் வெளியாகும் இரண்டாவது படம் என்பதால் அனைவர் மத்தியிலும் பலத்த எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது.இந்நிலையில் இப் படத்தினை பார்வையிட்ட sj சூர்யா தனுஷிற்கு "எங்கள் சர்வதேச நடிகர், இயக்குனருடன் NEEK பார்க்கும் பாக்கியம் கிடைத்தது தனுஷ் அய்யா என்ன ஒரு பொழுதுபோக்கு, இளம் GenZ, வேடிக்கை ஆனால் உணர்ச்சிகரமான ஆனால் தனித்துவமான திரைப்படம் இது ஐயா ஒரு கேள்வி இந்த இறுக்கமான கால அட்டவணையில் எப்படி உங்களால் இவ்வளவு அருமையான திரைப்படத்தை எடுக்க முடிந்தது அதுவும் ராயானுக்குப் பிறகு என்ன ஒரு இயக்கம் அனைத்து இளைஞர்களுக்கும் வாழ்த்துக்கள், அறிமுகமான பெண்கள் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினர்" என உணர்வுபூர்வமாக வாழ்த்து கூறியுள்ளார்.
இவரது இந்த பதிவிற்கு தனுஷ் நன்றி கூறி டுவிட் பதிவொன்றை போட்டுள்ளார்.அவர் மட்டுமல்லாது படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் ஆகாஷ் அவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!