பிக்பாஸ் சீசன் 8 இல் தற்போது பணப்பெட்டி டாஸ்க் நடந்து வருகின்றது குறித்த டாஸ்கில் இதுவரை முத்துக்குமரன்,ராயன்,விஷால்,பவித்ரா ஆகியோர் வெற்றிகரமாக பணப்பெட்டியை எடுத்து டாஸ்கில் வெற்றி பெற்றிருந்தனர்.
இந்நிலையில் 4 ஆவதாக பெட்டியை எடுப்பதற்கு சவுந்தர்யா செல்கின்றார் மிகவும் துடிப்பாக ஓடி பெட்டி இருக்கும் இடத்திற்கு மிகவும் அருகில் சென்று பெட்டியை எடுக்காமல் சுவாரஸ்யமாக விளையாடியுள்ளார்.பெட்டி மிக அருகில் இருந்தும் எடுக்காமல் வெளியேறிய இவர் சக போட்டியாளர்களிடம் பெட்டி மிக தூரத்தில் இருந்திச்சு என கூறியுள்ளார்.
மிகவும் ஒரு சுவாரஸ்யமான போட்டியாளரான இவர் மக்கள் மனதை வென்று இறுதிவரை அதாவது பைனல் போட்டியாளராக தெரிவாகியுள்ளார்.ரசிகர்கள் தற்போது இவர் இவ்வாறு செய்ததை படிக்காதவன் திரைப்பட விவேக்கின் வீடியோவுடன் சேர்த்து ட்றோல் செய்து வருகின்றனர். சவுந்தர்யா மேலும் விளையாட்டை சுவாரஸ்யமாக்கி பிக்போஸிற்கே அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
Listen News!