• Mar 01 2025

ரசிகர்களை கண்கலங்க வைத்த நடிகர் பிரதீப்..! எதற்கு தெரியுமா..?

Mathumitha / 2 weeks ago

Advertisement

Listen News!

பிரதீப் ரங்கநாதன் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வரும் 21 ஆம் தேதி வெளியாகவுள்ள "டிராகன்" திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்போடு வருகிறார். படம் தொடர்பான புதிய டிரெய்லர் வெளியான பின்னர் இதற்கான எதிர்பார்ப்புகள் மேலும் அதிகரித்துள்ளது.


இந்த நிலையில் பிரதீப் மற்றும் இயக்குநர் அஷ்வத் இருவரும் தங்களது வாழ்க்கையில் இடம்பெற்றுள்ள தடைகள் குறித்து நேர்காணல் ஒன்றில் மிகவும் அழகாக பேசியுள்ளனர். இதில் பிரதீப் தனது "லவ் டுடே " படத்தில் தனக்கு இருந்த ஆசைகள் அதை நிறைவேற்ற முடியாமல் போனமை குறித்து மிகவும் மனமுடைந்து பேசியுள்ளார்.


பிரதீப் ரங்கநாதன் தனது ‘லவ் டுடே’ படத்தில் இருக்கும் மன அழுத்தங்களை பகிர்ந்துள்ளார். "லவ் டுடே" படத்தில் தனது ஆசைகள் நிறைவேற்றப்படாமல் போனதாக படத்தின் குறைவான பட்ஜெட்டும் கேமரா தேவைகளின் குறைபாடும் அவரை சிரமத்தில் ஆழ்த்தியதாக கூறினார். ஆனால் தற்போது "டிராகன்" படத்தில் அவருக்குப் பொருத்தமான வசதிகள் அனைத்தும் கிடைத்துள்ளன. என கூறியுள்ளார்.


இந்த நேர்காணலை பார்வையிட்ட ரசிகர்கள் கவலையுடன் தங்களது கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement