• Sep 17 2026

பில்லா 2 வாய்ப்பை விஷ்ணுவர்தன் ஏன் நிராகரித்தார் தெரியுமா? வெளியான உண்மை இதோ.!

shali / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் விஷ்ணுவர்தன், நடிகர் அஜித்துடன் இணைந்து ‘பில்லா’, ‘ஆரம்பம்’ உள்ளிட்ட படங்களை வழங்கியவர். குறிப்பாக அஜித்துடன் அவர் கொண்டிருந்த கூட்டணி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், அஜித்தின் ‘பில்லா-2’ படத்திற்கான வாய்ப்பை தவறவிட்டது குறித்து விஷ்ணுவர்தன் பகிர்ந்துள்ள தகவல் தற்போது கவனம் பெற்றுள்ளது.

அவர் கூறியதாவது, “அஜித்தின் ‘பில்லா-2’ படத்திற்கான பேச்சு நடந்த அதே நேரத்தில், பவன் கல்யாணின் ‘பஞ்சா’ பட பணிகளும் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஒரு கட்டத்தில் இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் இயக்க முடியாது என்ற சூழ்நிலை ஏற்பட்டது.


அப்போது ‘பஞ்சா’ படத்தை இயக்க முடிவு செய்தேன். இதுகுறித்து அஜித்திடம் நேரடியாகப் பேசினேன். நான் எடுத்த முடிவை அவர் பெருந்தன்மையுடன் புரிந்துகொண்டார். அஜித்துடன் மீண்டும் இணையும் ஒரு வாய்ப்பை இழந்தாலும், ஏற்கனவே கொடுத்திருந்த வாக்கை காப்பாற்றுவது தான் சரி என்று நம்பினேன்...” எனத் தெரிவித்துள்ளார்.

விஷ்ணுவர்தனின் இந்த நேர்மையான முடிவும், அஜித்தின் பெருந்தன்மையான அணுகுமுறையும் ரசிகர்கள் மத்தியில் தற்போது பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக, ‘பில்லா-2’ படத்தை விஷ்ணுவர்தன் இயக்கியிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற கேள்வியையும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் எழுப்பி வருகின்றனர்.


Advertisement

Advertisement