• Dec 26 2024

இன்றைக்கும் மாயாவுக்கு தான் சப்போர்ட்டா? பல்பு வாங்கிய விக்ரம்! ஹவுஸ்மேட்ஸ் முன்னிலையில் ஆண்டவர் செய்த காரியம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் வார இறுதியில் கமல்ஹசன் தொகுத்து வழங்கும் காட்சியை பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கும்.

அதன்படி இன்று வெளியானஇரண்டாவது ப்ரோமோவில், பிக் பாஸ் வீட்டிற்கு வந்த போட்டியாளர்களின் குடும்பம், உறவினர்கள் சொன்னதில் என்ன ஏற்புடையது என கமல் கேட்கிறார்.


அதற்கு விக்ரம், யாரையும் நம்பாத.. முன்னாடி ஒன்று பின்னாடி ஒன்று பேசுவாங்க என சொன்னதாக சொல்ல, அது நம்பாத என்பதை விட சாயாத என்பதே பொருத்தமாக இருக்குமென கமல் சொல்லுகிறார்.


இதை தொடர்ந்து, முதல் வாரம் இருந்தே நான் நல்லா விளையாடி இருந்து இருந்தா இப்போ டாப்ல இருந்து இருப்பேன் என பூர்ணிமா சொல்ல, இப்ப நீங்க டாப்ல இல்லை என நினைக்கிறீங்களா என கேட்கிறார்.


இறுதியாக, இங்க இருக்கிற நண்பர்களை நம்ப கூடாது என மாயா சொல்ல, ஆமா இது ஒரு போட்டி, வெளில போய் தான் நட்ப தொடரனும் என சொல்லியுள்ளார் கமல்.

Advertisement

Advertisement