தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன்.
இந்நிலையில் அவர் தற்போது தயாரிப்பாளராக அறிமுகம் ஆகி 'ரவி மோகன் ஸ்டுடியோஸ்' என்ற பெயரில் நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் 'ஜெயம்' படம் மூலம் அறிமுகமாகி, தனி ஒருவன்,சந்தோஷ் சுப்ரமணியம், எம் குமரன் சன் ஒவ் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும் என பல வெற்றி படங்களை கொடுத்து சிறியவர்கள் முதல் வயோதிபர்கள் வரை இலட்சக்கணக்கான ரசிகர்களை தனது மாறுபட்ட நடிப்பால் கவர்ந்துள்ளார் ரவி மோகன்.
இந்நிலையில் 'ரவி மோகன் ஸ்டுடியோஸ்' என்ற பெயரில் புதிய நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார்.
அதன் தொடக்க விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
இதில் ரவி மோகன், தனது தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படத்தில் தான் ஹீரோவாக நடித்து, இயக்குநர் கார்த்திக் யோகியின் இயக்கத்தில் உருவாகப் போவதாக அறிவித்தார்.
மேலும், தனது இரண்டாவது தயாரிப்பாக, யோகி பாபுவை முக்கிய கதாபாத்திரத்தில் வைத்து, தானே இயக்குநராகவும் அறிமுகமாக இருப்பதாக தெரிவித்தார்.
இது ரவி மோகனின் புதிய முயற்சிக்கு திரையுலகத்தில் பெரும் வரவேற்பாக அமைந்துள்ளது.
இந்த தொடக்க விழாவில் கார்த்தி, சிவகார்த்திகேயன், எஸ்ஜே சூர்யா, ஜெனிலியா, சிவராஜ்குமார் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டு விழாவை மேலும் சிறப்பாக்கினார்கள்.
இந்நிலையில் ரவி மோகனின் திரைப்பயணத்திற்கு ஆதரவும் வாழ்த்துக்களும் தெரிவித்த அவர்கள், அவரது திறமைகளை மேடையில் பகிர்ந்து கொண்டனர்.
விழாவில் உரையாற்றிய நடிகர் கார்த்தி,
தனது நெருங்கிய நண்பர் ரவி மோகனை குறித்து உணர்வுப்பூர்வமாகப் பேசினார்.
“ரவியிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம், யாருக்கும் கெடுதல் நினைக்காத மனசு. அவனிடம் இருக்கும் பல திறமைகள் வெளிக்காட்டப்படாமலேயே இருக்கின்றன. ஒருமுறை ஒரு கதையை சொன்னப்போது அவன் எழுதும் திறமையையும், காட்சிப்படுத்தும் விதத்தையும் பார்த்து ஆச்சரியப்பட்டேன். எடிட்டிங், உலக சினிமா பற்றிய அறிவும் அவனுக்கு நிறைய இருக்கிறது,” என புகழ்ந்தார்.
இரண்டு படங்களையும் தானே தயாரித்து, ஒரு படத்தில் ஹீரோவாகவும் மற்றொரு படத்தில் இயக்குநராகவும் செயல்பட உள்ள ரவி மோகனின் இந்த புதிய முயற்சி திரையுலகத்தில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் ரசிகர்களும், சினிமா வட்டாரமும், அவரது வெற்றியை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!