தமிழ்த் திரையுலகில் பிரபல நடிகராக அறியப்படும் ரவி மோகன் தற்போது தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
ஜெயம் படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் ரவி. தனது முதல் படமே மிகப்பெரிய வெற்றி தொடராக அமைந்தது. இதனால் 'ஜெயம் ரவி' என கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் அழைக்கப்பட்டார். ஆனாலும் சமீபத்தில் தன்னை ரவி மோகன் என அழைக்கும் படி ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
ரவி மோகனின் தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்பட்டது. தற்போது அது விவாகரத்தில் காணப்படுவதோடு, அதற்கு இடையில் ரவி மோகன் தனது தோழியான கெனிஷாவுடன் வலம் வருவது வேடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.. ஆனாலும் ரவி வெளியிட்ட அறிக்கையில் தனது கஷ்ட நிலையில் ஒளிவிளக்காக கெனிஷா தான் காணப்பட்டார் என குறிப்பிட்டும் இருந்தார் .
ரவி மோகனின் சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் முதலாவதாக ஜோகி பாபுவின் படத்தை தான் தயாரிப்பதாகவும் சில நாட்களாக தகவல்கள் கசிந்தது. மேலும் இந்த திறப்பு விழாவில் பாடல், நடனம், நிகழ்ச்சி என பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. இதில் பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல்வேறு திரைப் பிரபலங்களும் அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், ரவி மோகனின் தாயாரை கெனிஷா கன்னத்தில் பிடித்து கொஞ்சிய வீடியோஸ் வைரலாகி வருகிறது.ஏற்கனவே கெனிஷாவுக்கும் ரவிக்கும் இடையில் பல கிசு கிசு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் தற்போது அவர் ரவியின் குடும்பத்தாருடன் மிக நெருக்கமாக காணப்படுவது ரசிகர்கள் மத்தியில் கேள்வியை எழுப்பி உள்ளது.
Listen News!