நடிகர் ரவி மோகன் தற்போது பராசக்தி மற்றும் கராத்தே பாபு எனும் இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இப்போது அவரின் கனவுத் திட்டமாக உருவான 'ரவிமோகன் ஸ்டூடியோஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழா இன்று மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த விழாவில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் மட்டுமின்றி, பிற மொழி பிரபலங்களும் கலந்துகொண்டு விழாவை மேலும் வண்ணமயமாக்கினர். குறிப்பாக கன்னட திரையின் சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரவி மோகனுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
விழாவில் கார்த்தி, சிவகார்த்திகேயன், ஜெனிலியா, மணிகண்டன், ஷ்ரத்தா ஸ்ரீனாத், மோகன் ராஜா, அதர்வா உள்ளிட்ட திரை பிரபலங்களும் பங்கேற்று, ரவி மோகனை வாழ்த்தினர். இந்த நிகழ்ச்சியின் போது, 'ரவிமோகன் ஸ்டூடியோஸ்' தயாரிக்க உள்ள முதல் இரண்டு திரைப்படங்களின் பூஜை விழாவும் நடத்தப்பட்டது.
சிறப்பு அம்சமாக, நடிகை ஜெனிலியா மற்றும் ரவி மோகன் இணைந்து, இருவரும் இணைந்து நடித்த சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் இடம்பெற்ற பிரபலமான 'காஃபி ஷாப்' சீனை மீண்டும் உருவாக்கி அனைவரையும் கவர்ந்துள்ளது.தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
Listen News!