தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக காணப்படும் அஜித்குமார் துபாயில் நடைபெற்ற 24 மணி நேர கார் ரேஸ் பந்தயத்தில் அஜித் குமார் அணி சார்பில் பங்கு பற்றி மூன்றாவது இடத்தை பெற்று வெற்றார். இதற்கு பலரும் ஏராளமான வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.
இந்த நிலையில், அஜித்துக்கு ஏராளமான பாராட்டுகளும் வாழ்த்துக்களும் குவிந்து வரும் நிலையில், பாடகி சுசித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் லைவில் அஜித்குமாரின் கார் ரேஸ் பற்றி சரமாரியாக விமர்சித்துள்ளார். தற்போது அதில் அவர் கூறிய விடயங்கள் வைரலாகி வருகின்றது.
அதன்படி அவர் கூறுகையில், வயசான காலத்தில் அஜித்குமாருக்கு இதெல்லாம் தேவையா? சினிமாவில் நடனம் ஆட முடியவில்லை., சண்டைக்காட்சிகளில் கூட சரியாக நடிக்க முடியல, ஆனால் உடல் வலிமை கொண்ட நபர்கள் பங்கேற்கும் கார் ரேஸில் ஏன் கலந்து கொள்ள வேண்டும்? பேசும் போதே மூச்சு வாங்கி பேசுறார்.
அஜித் போன்ற பெரிய நடிகர்கள் அதிகப்படியான பணத்தை கொண்டு போய் எதற்காக கார் ரேஸில் கொட்ட வேண்டும்? அந்த பணத்தை தமிழ்நாட்டில் உள்ள ஏழைக் குழந்தைகளின் படிப்புக்காக செலவு செய்யலாம் தானே.. தென்கொரியாவில் கார் ரேஸின் ஆபத்தை உணர்ந்து அவற்றை தடை செய்தார்கள். அப்படியான விளையாட்டில் அஜித் இந்த வயசில் ஏன் கலந்து கொள்ள வேண்டும்.
இப்போ விஷாலை பார்த்தா பாவமா இல்ல. அஜித் குமார பாத்தா தான் பாவமா இருக்கு. எல்லாம் பணம் செய்யும் வேலை. சாருக்கானும் இப்படித்தான் தன்னிடம் உள்ள பணத்தை கிரிக்கெட்டில் கொண்டு போய் கொட்டினார். அதேபோலத்தான் அஜித்தும் தன்னிடம் உள்ள கோடிகளை கொண்டு போய் கார் ரேஸில் கொட்டுகின்றார் என விமர்சித்துள்ளார்
Listen News!