• Dec 26 2024

எதிர் நீச்சல் சீரியல் ஈஸ்வரிக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கின்றாரா?- அம்மாவுக்கு டஃப் கொடுக்க நடிக்க வருவார் போல இருக்கே....

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான, '5 ஸ்டார்' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் கனிகா. இதை தொடர்ந்து, மாதவனுடன் எதிரி, சேரனுக்கு ஜோடியாக ஆட்டோகிராப், மற்றும் அஜித்துக்கு ஜோடியாக வரலாறு போன்ற படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர்.

தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, கன்னடம், மற்றும் மலையாள படங்களிலும் ஹீரோயினாக நடித்துள்ள கனிகா, தமிழில் ஜெனிலியா, சதா, ஸ்ரேயா போன்ற பல முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் பேசியுள்ளார். 


இவர் தற்பொழுது சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் சீரியலில் ஈஸ்வரி என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.இந்த சீரியல் மூலமாக அவருக்கு இன்னும் அதிகமான ரசிகர்கள் கிடைத்து இருக்கிறார்கள்.


நடிகை கனிகாவுக்கு 13 வயதில் ஒரு மகன் இருக்கிறார். அவரது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படத்தை தற்போது கனிகா வெளியிட்டு இருக்கிறார்.கனிகாவுக்கு தோள் உயரத்திற்கு வளர்ந்த மகனா என ரசிகர்கள் அந்தப புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்  என்பதும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement