• Jan 08 2025

இன்னுமா ஊர் உன்ன நம்பிட்டு இருக்கு?? வர்ஷினி சொன்ன சீக்ரெட்டால் மரணபீதியில் ஹவுஸ்மேட்ஸ்

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 93 வது நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் பழைய போட்டியாளர்களான சிவக்குமார், வர்ஷினி ஆகியோர் ஹவுஸ்மேட்ஸை  புரட்டி எடுத்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது பழைய போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு நுழைந்துள்ளனர். முதலாவதாக சுனிதா நுழைந்து போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார். அதன் பின்பு அர்னவ், ரவீந்தர், வர்ஷினி, ரியா தியாகராஜன், சிவக்குமார் மற்றும் தர்ஷா குப்தா  ஆகியோர் நுழைந்த காட்சிகள் ப்ரோமோக்களில் வெளியாகி இருந்தது.

முதலாவதாக நுழைந்த சுனிதா விஷால், ஜாக்குலின், சௌந்தர்யா ஆகியோரை தனது பாணியிலேயே கலாய்த்திருந்தார். அதன் பின்பு அர்னவ்  வழமை போலவே போட்டியாளர்கள் மத்தியில் தனது வன்மத்தை கக்கி இருந்தார். 

d_i_a

எனினும் ரவீந்தர் சக போட்டியாளர்களோடு சகஜகமாக பேசியிருந்தார். மேலும் முத்துவுக்கு டைட்டிலை விட்டு விடாதே என்பது போல் அட்வைஸும் பண்ணியிருந்தார்.

இந்த நிலையில், தற்போது வெளியான ப்ரோமோவில் சிவக்குமார் அறிவித்தல் ஒன்றை வாசிக்கின்றார். அதன்படி அதில்,  கிளாப் வர வர பிரண்ட்ஸ்சையும் மாத்திக்கிட்டே இருக்கீங்களே.. இப்போ உங்க லேட்டஸ்ட் பிரண்டு யாரு? என ஜாக்குலினை பார்த்து கேட்கிறார்.

அதன்பின் லவ் கன்டென்ட் மட்டும்தான்  விஷாலுக்கு என்டர்டைன்மென்ட் போலையே.. என விஷாலையும் போட்டுத் தள்ளியுள்ளார். மேலும் அறம்.. அறம்.. என்று அறுக்குறியே தவிர நீ செய்ற எதுலையும் அறம் இல்லையே.. இன்னுமா இந்த ஊர் உன்ன நம்பிக்கிட்டு இருக்கு ? என்று முத்துவையும் பங்கம் பண்ணியுள்ளார்.

இதைத்தொடர்ந்து பேசிய வர்ஷினி, இந்த வாரம் மிட் வீக் எவிக்சன் இருக்குது.. அந்த எவிக்சனை நடத்தப் போறது புதுசா வந்திருக்கிற நாங்க எட்டு பேரும் தான் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement