• Jan 08 2025

பிக்பாஸில் அடுத்தடுத்து நுழைந்த எக்ஸ் கண்டெண்ட்ஸ்..! முத்துவுக்கு ரவீந்தர் சொன்ன அட்வைஸ்

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் வீட்டில் தற்போது பழைய போட்டியாளர்கள் என்ட்ரி கொடுத்து வருகின்றார்கள் . முதலாவதாக சுனிதா பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்திருந்தார். இவர் படபட என பேசிய விஷயங்களும் விஷால், ஜாக்குலினை கலாய்த்த விடயமும் ரசிகர்கள் மத்தியில் சுவாரசியத்தை ஏற்படுத்தி இருந்தது.

இவரை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிற்குள் அர்னவ் நுழைந்தார். இவர் எலிமினேட்டாகி போகும்போது போட்டியாளர்கள் மத்தியில் என்ன வன்மத்தை கொட்டினாரோ அதேபோல பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் நுழைந்து சக போட்டியாளர்கள் மீது தனது வன்மத்தை கொட்டி தீர்த்துள்ளார். 

d_i_a

இதன் போது முத்து, ஜாக்குலின் ஆகியோர் கொதித்தெழுந்து அவருடன் வாக்குவாதப்பட்டதும் அதற்கு பதிலாக அவர் சாமண்டி சாமண்டி லக்க லக்க என கலாய்த்ததும் இணையத்தில் படு வைரலாகி இருந்தது.


பிக்பாஸ் வீட்டில் தற்போது பழைய போட்டியாளர்கள் மீண்டும் என்ட்ரி கொடுத்து வரும் நிலையில் மொத்தமாக எட்டு போட்டியாளர்கள் வர இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது.  

இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் தற்போது சுனிதா, அர்னவ் வந்துள்ள நிலையில் இவர்களை தொடர்ந்து தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் வர்ஷினி வெங்கட் ஆகியோரும் நுழைந்துள்ளார்கள். 


இதன்போது சக போட்டியாளர்களிடம் பேசிய ரவீந்தர், தான் இப்போது தான் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்திருக்கலாம் என யோசிக்கின்றேன். அதற்கு காரணம் மஞ்சரி, ராயன் போன்ற கடும் போட்டியாளர்கள் மத்தியில் நானும் இருந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ரயான் நல்ல போட்டியாளர், நல்லவன் என்றும் புகழ்ந்து தள்ளியுள்ளார். மேலும் கப்பு முக்கியம் பிகிலு என்ற ஸ்டைலில் முத்துவுக்கு அட்வைஸும் பண்ணியுள்ளார். இவ்வாறு ரவீந்தர் சக போட்டியாளர்களுடன் சகஜமாக பேசி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement