• Dec 25 2024

சத்யாவுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் தெரியலையா..? ஜாக்குலின் முகத்தை பஞ்சர் பண்ணிட்டாரே.!!

Aathira / 1 month ago

Advertisement

Listen News!






விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த முறை இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகின்றார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுள் டிஆர்பி ரேட்டிங்கை உச்ச நிலைக்கு கொண்டு செல்லும் ஒரு ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் முதல் 7 சீசன்களையும் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். ஆனாலும் இந்த சீசனில் அவர் பங்கு கொள்ள முடியாத நிலையில் அவருக்கு பதிலாக விஜய் சேதுபதி கலந்து கொண்டுள்ளார்.

இந்த சீசனின் ஆரம்பத்தில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, தர்ஷா குப்தா, சத்யா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றார்கள்.

d_i_a

இதை தொடர்ந்து ரவீந்தர், அர்ணவ், தர்ஷா குப்தா, சுனிதா ஆகியோர் எலிமினிட்டாகி வெளியே சென்றார்கள். மேலும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன் ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்கள்.


இந்த நிலையில், தற்போது வெளியான பிக் பாஸ் ப்ரோமோ இரண்டில் ஹவுஸ்மேட்ஸ் இடையே நடக்கும் வாக்குவாதம் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. தற்போது இதை பார்த்த ரசிகர்கள் சத்யா அதில் நடந்து கொண்ட விதம் தொடர்பில் பேசி வருகின்றார்கள்.

அதாவது ஜாக்குலின் கிளாஸ் நடத்திக் கொண்டிருக்கும்போது, பேசணும் என்ற இடத்துல பேசுங்க.. பேசக்கூடாது என்ற இடத்தில பேசாதீங்க.. கவனியுங்கள்.. என்று சொல்லுகின்றார். 

இதை கேட்ட சத்யா நாமினேஷன் ரிவ்யூ மாதிரி இருக்குது என்று சொல்ல, நான் எடுக்கிற  கிளாசை தான் நீங்கள் கவனிக்க வேண்டும் என்று ஜாக்லின் சொல்லுகின்றார். மேலும் உங்களுக்கு பிடிக்கல என்றா எழுந்து வெளியே போங்க என்று சொல்ல, சத்யா உடனே எழுந்து வெளியே செல்கின்றார். 

Advertisement

Advertisement