• Dec 26 2024

நெஞ்சு வெடிச்சு செத்துருங்க கோபி... ராதிகா கொடுத்த வார்னிங்! பரிதாபத்தில் பாக்கியா

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய நாளில் என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், மொட்டை மாடியில் இருந்து செல்வியும் பாக்கியாவும்  பேசிக் கொண்டிருக்க, உனக்கு வருத்தமாகவே இல்லையா? என்று செல்வி கேட்க, நான் எதற்கு வருத்தப்படணும். கோபி எப்பவுமே என்ன பிடிக்கலைன்னு சொல்லிக்கிட்டே இருப்பார். நான் என்ன செஞ்சாலும் அவருக்கு பிடிக்காது. காரணம் அவருக்கு என்னையே சுத்தமா பிடிக்காது. நான் சரியான அம்மாவா இல்லை என்று சொல்லுவாரு. ஆனா இன்னைக்கு அவர் பண்ணிருக்க விஷயத்தை பார்த்தா அருவருப்பா இருக்குது.

அவர விவாகரத்து பண்ணினது தான் நான் செஞ்ச சரியான விஷயம் என்று பாக்கியா சொல்லுகிறார். மேலும் இனி என்ன செஞ்சாலும் நான் அமைதியாக இருக்க மாட்டேன் என்றும் சொல்கிறார்.

இதை தொடர்ந்து ஈஸ்வரி தூக்கம் வராமல் தவிக்க, ராமமூர்த்தி என்ன ஆச்சு என்று கேட்கிறார். சாப்பிட்டது செரிக்கல தண்ணீர் குடிச்சிட்டு வாரேன் என்று செல்கிறார் ஈஸ்வரி.  அங்கு கோபியும் சோபாவில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார். இதை பார்த்து நீங்களும் தூங்கலையா என்று ஈஸ்வரிடம் கேட்க, நீ சொன்ன  விஷயத்தை கேட்டு நான் எப்படி தூங்குவேன் என்று சொல்லுகிறார்.


மேலும் ராதிகா ஏன்டா இப்படி இருக்கா? இந்த விஷயம் உன் பசங்களுக்கு தெரிஞ்சா உனக்கு மரியாதை இருக்காது என்று சொல்ல, நீங்க இப்படி சொல்றீங்க ஆனா அவ எல்லாருக்கும் தான் கர்ப்பமாக இருக்கன்னு சொல்லணும்னு சொல்லுறா. என்னதான் செய்றது. என் நெஞ்சை வெடிச்சு செத்துருவன் போல இருக்குது என்று வருத்தப்படுகிறார் கோபி. இந்த குழந்தை வேண்டாம் என்று நானும் சொன்னேன். ஆனாலும் ராதிகா கேட்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறார் என்று சொல்லி கலங்குகிறார். அதற்கு ஈஸ்வரி சரி விடு பார்ப்போம் என ஆறுதல் சொல்லுகிறார்.

மறுநாள் காலையில் கோபி தூங்காமல் ராதிகா பக்கத்தில் உட்கார்ந்து இருக்க, நீங்க வாக்கிங் போகலையா என்று ராதிகா கேட்க, டயர்டா இருக்கு அதனால போகல என்று சொல்கிறார் கோபி.

அதன்பின் மீண்டும் குழந்தை பற்றிய பேச்சு வர, உங்க வீட்டுல எப்ப சொல்ல போறீங்க, உங்க அம்மா ஏதாவது பண்ணின பிறகு சொல்ல போறீங்களா என்று ராதிக்கா கேட்கிறார். அதற்கு கோபி எங்க அம்மா என்ன பண்ண போறாங்க? என்று கேட்க, அவங்களுக்கு தான் இந்த குழந்தையை பிடிக்கவில்லையே, சினிமால வாரது போல ஏதாவது கலந்து கருவ கலைச்சிட்டாங்கன்னா என்ன பண்றது என்று பேசி கோபிக்கு அதிர்ச்சி கொடுக்கிறார்.

இதனால் கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையே வாக்குவாதம் உருவாக, உனக்கும் நம்ம குழந்தைக்கும் எதுவும் ஆகாது நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கோபி எழுந்து வாக்கிங் போகிறார்.

அதற்கு ராதிகா இப்பதானே டயர்டா இருக்கு என்று சொன்னீங்க என்று கேட்க, அதான் பேசியே கொட்டிட்டியே இப்ப எல்லாம் சரியாயிடுச்சு நான் வாக்கிங் போயிட்டு வந்து உண்மைய எல்லார்கிட்டயும் போட்டு உடைக்கிறேன் போதுமா என கிளம்பி செல்கிறார் இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement