• Dec 26 2024

பங்க்ஷனுக்கு வந்துடாதீங்க... ஈஸ்வரியை அசிங்கப்படுத்திய ஜெனியின் குடும்பம்! புதிய சிக்கலில் மாட்டிய பாக்கியா

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி. இந்த இரண்டு சீரியல் மெகா சங்கமும் என்ற பெயரில் ஒரு மணி நேரம் ஆக இணைந்து ஒளிபரப்பாகி வருகிறது. 

இந்த நிலையில் இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்டில் என்ன நடக்குது என்று பார்ப்போம், 

அதில், பாக்கியா மற்றும் கோமதி குடும்பத்தினர் மீண்டும் ஹோட்டலில் சந்தித்துக் கொள்கின்றனர்.


அதன் பிறகு இங்கே வீட்டில் கோபி ஊருக்கு கிளம்புவதாக சொல்ல ஈஸ்வரி போயிட்டு வாப்பா ஒன்னும் பிரச்சனை இல்ல என கூறுகிறார்.

இனியா வீட்டுல போரடிக்கும் என்று சொல்ல ராதிகா நீ எங்களோட வா என்று கூப்பிட இனியாவும் ஓகே சொல்லி அவர்களுடன் கிளம்பி குன்னக்குடி வருகிறார். 


இதை தொடர்ந்து,  பாக்யா அமைச்சரை சந்திக்க அவர் பெரிய பெரிய அமைச்சர் எல்லாம் வராங்க முடிஞ்சா முதலமைச்சர் கூட வருவாரு அதனால நல்லா சமைக்கணும் என கூறுகிறார். உங்களுக்கு உதவிய இந்த ஊர் பெண்கள் சிலரை ஏற்பாடு பண்ணி இருக்கேன் என சொல்ல பிறகு அந்த பெண்கள் வருகின்றனர். 

அவர்களுக்கு வீட்டில் சமைப்பதை தவிர வேறு எங்கும் சமைத்து பழக்கம் இல்லை என தெரிய வர பாக்கியா என்ன செய்வது என்று தெரியாமல் குழம்புகிறார். இருந்தாலும் சமாளிப்போம் என முடிவெடுக்கிறார். 


அடுத்து கோபி ராதிகா இனியா குன்னக்குடி வர,  ராதிகாவின் அண்ணன்கள் கோபியை போட்டு வாங்க மச்சான் என உலுக்கி எடுக்கின்றனர்.  ராஜி டல்லாக இருப்பதை பார்த்து உனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் தானே என ராதிகா கேட்க, அவரது அண்ணன்கள் நம்பள விட பெரிய வீட்டு சம்பந்தம் அப்புறம் சம்பந்தமில்லாமல் இருக்குமா என சொல்கின்றனர். 

பிறகு ஜோசப் தேடி வந்து குழந்தைக்கு பேர் வைக்க போற விஷயத்தை சொல்லி பத்திரிகையை கையில் கொடுப்பது போல கீழே வைத்து அவமானப்படுத்தி இதே கோபத்தோட இருங்க, கோபம் தணிந்து பங்க்ஷனுக்கு வந்துடாதீங்க என சொல்லி கிளம்புகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட். 

Advertisement

Advertisement