• Dec 26 2024

பொங்கல் ரெஸில் டல்லான படம் எது தெரியுமா? 10 நாட்களின் நிறைவில் நடந்த வசூல் வேட்டை

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

பொங்கல் தினமன்று வெளியான அயலான் திரைப்படம் வசூலில் தொடர்ந்தும் மாஸ் காட்டி வருகின்றது. தற்போது வெளியான முழு விபரங்களையும் பார்ப்போம்.

முதல் நாளில் இரண்டு படங்களுக்குமே ஓரளவு பாசிட்டிவ் விமர்சனங்களே கிடைத்தன. ஆனால் நாளடைவில் அயலானுக்கு தான் வசூல் வாரி குவிக்கப்பட்டது.

கேப்டன் மில்லர் படம் சமூக அக்கறையுள்ள படமாக உருவாக்க அருண் மாதேஸ்வரன் முயற்சி செய்திருக்கிறார் இதனால் விமர்சனம் பின்னடைவை கொடுத்தது.


அத்துடன், அயலான் திரைப்படம் வெளியாகி நான்கு நாட்களிலேயே 50 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துவிட்டது.  10 நாட்கள் நிறைவடைந்த சூழலில் அயலான் திரைப்படம் 70 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது.

அதேபோல், கேப்டன் மில்லரோ 50 கோடி ரூபாய் அளவுக்குத்தான் இருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

அதன்படி நேற்று அயலான் திரைப்படம் கிட்டத்தட்ட 80 லட்சம் ரூபாய்வரையிலும், கேப்டன் மில்லர் 60 லட்சம் ரூபாய்வரையிலும் வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Advertisement

Advertisement