• Sep 17 2026

ரீல்ஸுக்காக பஞ்ச் டயலாக் பேசாதீங்க.! CM விஜய்யை வம்பிற்கிழுத்த உதயநிதி ஸ்டாலின்

shali / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ்நாடு சட்டசபையில் முதலமைச்சர் விஜய் பேசிய கருத்துகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மனப்பாடம் செய்து ஒப்புவித்தல் போட்டியைப் போல, தவறான கருத்துகளை முதலமைச்சர் விஜய் சட்டசபையில் ஒப்புவித்ததாக அவர் விமர்சித்துள்ளார்.

சட்டசபையில் பேச அனுமதி மறுக்கப்படுவதாக குற்றம்சாட்டி எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்த நிலையில், வெளியே செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய் ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசியதாக தெரிவித்தார்.


மேலும், தாம் ஏற்கனவே முதலமைச்சரிடம் 15 கேள்விகளை முன்வைத்திருந்ததாகவும், அவற்றில் ஒரு கேள்விக்குக் கூட விஜய் பதிலளிக்கவில்லை என்றும் உதயநிதி கூறினார். தொடர்ந்து பேசிய அவர், சட்டசபையில் மக்கள் பிரச்சனைகள் மற்றும் எதிர்க்கட்சியின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்கு பதிலாக, ரீல்ஸுக்காக பஞ்ச் டயலாக் பேசுவது போன்ற அணுகுமுறையை முதலமைச்சர் விஜய் கடைப்பிடிப்பதாக விமர்சித்தார்.

மேலும், “பஞ்ச் டயலாக் மற்றும் டைவர்ஷன் டேக்டிக்ஸ் மட்டுமே பயன்படுத்துகிறார்” எனவும் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டினார். அதே நேரத்தில், திமுகவினர் மீது ஏதேனும் வழக்குகள் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றும், அதற்கு தாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

முதலமைச்சர் விஜயின் சட்டசபை பேச்சு தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த இந்த விமர்சனங்கள் தற்போது அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைத்தளங்களிலும் கவனம் பெற்றுள்ளன.

Advertisement

Advertisement