பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், ராதிகாவுக்கும் கோபிக்கும் இடையே வாக்குவாதம் தொடர ஒரு கட்டத்தில் கோபி நெஞ்சை பிடித்துக் கொண்டு சரிந்து விழுகின்றார். இதனால் எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றார்கள். அதன் பின் கோபியை ஈஸ்வரியும் செழியனும் ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்கின்றார்கள்.
அங்கு கோபி டென்ஷன் ஆனபடியால் தான் மீண்டும் வலி வந்ததாக டாக்டர் சொல்கின்றார். வீட்டில் இருந்த இனியா கோபியை நினைத்து அழுததோடு மட்டுமில்லாமல் இதுக்கெல்லாமே காரணம் நீங்க தான் என்று ராதிகாவுக்கு எதிராக பேசுகின்றார்.
இதன் போது பாக்கியா அமைதியாக இருக்கச் சொல்லவும் முடியாது என்று சொல்லி எங்களுடைய சந்தோஷம் எல்லாம் உங்களால் தான் இல்லாம போனது.. எங்க டாடியை கொன்னுடாதீங்க ப்ளீஸ் என்று ராதிகாவிடம் சொல்ல, பாக்கியா இனியாவுக்கு பளார் என அறைகின்றார்.
அதன் பின்பு வீட்டுக்கு வந்த கோபியிடம் நலம் விசாரிக்க, பேசாமல் ரூமுக்கு சென்று விடுகின்றார். பின்பு செழியனிடம் ராதிகா விசாரிக்க, அவர் டென்ஷன் ஆனபடியால் தான் அவருக்கு இப்படி நடந்தது என்று சொல்லிவிட்டுச் செல்கின்றார்.
இறுதியாக ஈஸ்வரி கோபியை எப்போது விவாகரத்து பண்ண போகின்றாய் என்று ராதிகாவிடம் கேட்கின்றார். மேலும் உன்னை கட்டிக்கிட்டு அவன் எந்த சந்தோஷத்தையும் அனுபவித்ததில்லை இனி இந்த வீட்டு பக்கம் வந்திடாதே என்று வீட்டை விட்டு வெளியே போ என ராதிகாவை விரட்டுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!