• Dec 26 2024

இந்த வாரம் டபுள் எவிக்ஷனா?- ரவீனாவுடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது யார் தெரியுமா?

stella / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சிக் கென்று தனிரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது. அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆரம்பமாகிய இந்த நிகழ்ச்சியானது முடிவடைய இன்னும் சில நாட்களே இருப்பதால் டைட்டில் வின்னராக யார் ஆவார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.

எந்த சீசனிலும் இல்லாத விறுவிறுப்பின் உச்சமாக இந்த பிக்பாஸ் 7வது சீசனில் இரண்டு வீடு, டபுள் டபுள் எவிக்ஷன் என ஏகப்பட்ட புது விஷயங்கள் நடந்தன.மேலும் இந்த வாரம் முழுவதும் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடைபெற்றது. இதனால் போட்டியாளர்கள் கடுமையாக விளையாடி வந்தனர்.


இதில் விஷ்ணு டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் வெற்றி பெற்று நேரடியாக பைனலுக்கு தேர்வாகியுள்ளார்.இது ஒரு புறம் இருந்த இந்த நிகழ்ச்சியிருந்து இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகமாகக் காணப்பட்டது.

இந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து ரவீனா வெளியேறியுள்ளார் என ஏற்கெனவே தகவல் வர இப்போது இன்னொரு எவிக்ஷன் நடந்ததாக கூறப்படுகிறது.ரவீனா மற்றும் நிக்சன் வெளியேறி இருப்பதாக குணச்சித்திர நடிகை ஒருவர் டுவிட்டரில் பதிவு போட்டுள்ளார். நிக்சன் வெளியேறியது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement