• Apr 04 2025

மேடையில் டான்ஸ் ஆடிக் கலக்கிய டிராகன் பட நடிகை...! ரெண்டான லேட்டஸ்ட் வீடியோ!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது "டிராகன்" திரைப்படம். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகையாக கயாடு காணப்படுகிறார்.

மிகவும் சிறிய வயதில் சினிமாவிற்குள் வந்தாலும், கயாடு தற்போது ஸ்டைலிஷ் மற்றும் தனித்துவமான பார்வை என்பவற்றால் பிரபலமடைந்து வருகின்றார். இந்நிலையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கயாடு அதில் தனது திறமையை பயன்படுத்தி சிறப்பாக நடனமாடியுள்ள வீடியோ தற்பொழுது வைரலாகி வருகின்றது.


சென்னையில் நடைபெற்ற பிரமாண்ட நிகழ்ச்சியில் கயாடு செம்ம ஸ்டைலிஷாகக் கலந்து கொண்டார். கயாடு மிகவும் அழகாக நடனமாடிய காட்சி அங்கு வந்திருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. யாரும் எதிர்பார்க்காத வகையில், கயாடு சிறப்பாக நடனமாடியுள்ளார்.

அந்நிகழ்ச்சிக்காக கயாடு தேர்ந்தெடுத்திருந்த ஆடை தான் ஒரு ஹைலைட். இந்த வீடியோ வைரலான பிறகு, பல ரசிகர்கள் மற்ற நடிகைகளின் டான்ஸ் வீடியோக்களுடன் கயாடுவின் நடனத்தை ஒப்பிடத் தொடங்கியுள்ளனர்.


Advertisement

Advertisement