• Dec 29 2024

கனவு நனவானது,குணாவை சந்தித்த ரியல் மஞ்சும்மல் பாய்ஸ் !

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

கடந்த 22 பிப்ரவரி 2024 அன்று மலையாள மொழியில் திரையரங்குகளில் வெளியாகி விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றதோடு வணிக ரீதியாக வெற்றிபெற்ற திரைப்படமாக அறிவிக்கப்பட்டமஞ்சும்மல் பாய்ஸ் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். 


தங்கள் விடுமுறையைக் கழிக்க கொடைக்கானல் செல்லும்போது அவர்களில் ஒருவர் குணா குகைக்குள் சிக்கிக் கொள்ளும்போது அவர்களின் விடுமுறை எதிர்பாராத திருப்பத்தை எடுக்கிறது.2,200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள குணா குகை, கூட்டம் கூட்டமாக பயணிகளை ஈர்க்கும் மர்மமான மற்றும் அதிசயத்தக்க பகுதியாகும். 


முன்னதாக 'டெவில்ஸ் கிச்சன்' என்று அழைக்கப்பட்ட இந்த இடத்திற்கு 1991ஆம் ஆண்டு தமிழில் உலக நாயகன் நடிப்பில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படமான குணா, இங்கு படமாக்கப்பட்டதால் 'குணா' என்ற பெயராலே இன்று வரை அறியப்படுகிறது.


படம் வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்று வந்த நிலையில் படத்தில் நடித்த மஞ்சும்மல் பாய்ஸ் குழுவை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த்.இந்நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் ரியல் மஞ்சும்மல் பாய்ஸ் குழு சந்தித்து உரையாடிய காணொளிகள் சமூக வலைத்தளங்களில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement