• Dec 28 2024

துபாய் யூட்யூபரின் முன்னாள் மனைவி போட்ட சாபம்.. ரகசிய திருமணம் செய்வாரா சுனைனா?

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர்தான் சுனைனா. இவர் ஒரு சில படங்களில் நகுலுக்கு  ஜோடியாக நடித்தார். இதனால் இவர்கள் தொடர்பில் கிசுகிசுக்கள் அதிகமாக எழுந்தன.

இதைத்தொடர்ந்து இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நகுல் திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் தற்போது வரையில் சுனைனா இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

எனினும் சமீபத்தில் சுனைனா  தனக்கு நிச்சயமாகிவிட்டது என பதிவிட்டு இருந்தார். அதே திகதியில் பிரபல யூட்யூபரான காலித் அல் அமெரியும்  தனக்கு நிச்சயம் ஆகிவிட்டது என பதிவிட்டு இருந்தார். இவ்வாறு  அவர்கள் இடையில் இருக்கும் நட்பும், அடிக்கடி அவர்கள் இருவரும் மாறி மாறி போட்டுக்கொள்ளும் லைக்குகளும் இருவருக்கும் தான் நிச்சயம் ஆகி விட்டது என கெஸ் பண்ணி விட்டார்கள்.

பிரபல யூட்யூபரான காலித் அல் அமெரி ஏற்கனவே பிரபல யூடியூபரான சலாமா என்பவரை திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கு இரண்டு மகன்களும் உள்ளனர். ஆனாலும் சமீபத்தில் தான் சலாமாவை விவாகரத்து செய்து பிரிந்தார் காலித்.


இதற்கு காரணம் நடிகை சுனைனா என்றும் சுனைனாவுடன் ஏற்பட்ட காதல் காரணமாகத்தான் சலாமாவை அவர் விவாகரத்து செய்தார் எனவும் கிசுகிசுக்கள் பட்டன. ஆனாலும் இது தொடர்பில் இருவருமே எந்தவித அறிவிப்போ மறுப்போ தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், தனது விவாகரத்து குறித்து பேசிய சலாமா தான் இப்போது சந்தோஷமாகவும் சுதந்திரமாகவும் இருப்பதாகவும், ஆரம்பத்தில் பெற்றோர்களுக்கு கட்டுப்பட்டு இருந்தேன்.  அதன்பின் கணவரின் கட்டுப்பட்டுக்குள்  இருந்தேன். இப்போது கடந்த சில மாதங்களாகவே சுதந்திரமாக இருக்கின்றேன் எனக் கூறியுள்ளார்.

எனினும் சிலரை சும்மா விடமாட்டேன் என்றும், சில துரோகங்களை செய்பவர்கள் நல்லா இருக்க மாட்டாங்க என்று சாபம் விட்டுள்ளார்.

இவ்வாறு சலாமா தனது பேட்டி கொடுத்த நிலையில், சுனைனா அவரை தான் மதம் மாறி திருமணம் செய்ய போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொள்ளவும் வாய்ப்பு அதிகம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement