• Dec 25 2024

சற்று முன் தனுஷ்- ஐஸ்வர்யா நீதிமன்றத்தில் ஆஜர்! விவாகரத்து வழக்கின் தீர்ப்பு!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவரும் பிரிவதாக அறிவித்து குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்த நிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, இருவரும் ஆஜரானதாக தகவல் வெளியாகியுள்ளது. 


கருத்து வேறுபாடு ஈகோ பிரச்சினையால் பிரிந்த இந்த ஜோடி சேருவார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நிலவி வருகிறது. இந்த நிலையில், தனுஷ், ஐஸ்வர்யா ஆகிய இருவரும் விசாரணைக்கு நேரில் ஆஜராவதற்காக மூன்று முறை சம்மன் அனுப்பிய நிலையில், இருவரும் ஆஜராவில்லை. இதனால் இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.


இந்த நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் நீதிபதி முன் ஆஜராகினர். இருவரிடமும் நீதிபதி விசாரணை செய்ததாகவும், நவம்பர் 27ஆம் தேதி  இறுதி தீர்வு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

Advertisement