• Jun 12 2026

ராதிகா வீட்டில் மீண்டும் வெடித்த பூகம்பம்.. சிக்கிய கமலா! பாக்கியாவை காப்பாற்றிய பழனி

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், ஈஸ்வரி கோபி வாக்கிங் வர, ஜெனியும் பாக்கியாவும் அவரை பார்த்துவிடுகிறார்கள். இதன் போது ஜெனியின் டிரெஸ்ஸை பார்த்து ஈஸ்வரி திட்டுவார் என இருவரும் திரும்ப ஈஸ்வரி பார்த்துவிட்டு கூப்பிட்டு, இது என்ன உடுப்பு என கேக்க, பாக்கியா வேறு கதையை சொல்லி சமாளிக்கிறார்.

இதை தொடர்ந்து அவர்கள் இருவரும் கிளம்ப, ஈஸ்வரி கோபியிடம் கமலா பேசிய விஷயத்தை சொல்லுகிறார். இதை சும்மா விட முடியாது என வீட்டுக்கு வந்த கோபி, ராதிகாவின் அம்மாவை அழைத்து மையூ கிட்ட என்ன சொன்னிங்க என்று கேட்க, அவர் ஒன்றும் சொல்லவில்லை என சொல்லுகிறார். 

ஆனாலும் கோபி அவரை எச்சரித்து செல்கிறார். கோபி போன பின்பு ராதிகா கேட்கவும் தான் ஒன்றும் செய்யவில்லை என்று சொல்லுகிறார். ஆனால் மையூவை கூப்பிட்டு கேட்க அவர் உண்மையை சொல்லி விடுகிறார்.


மறுப்பக்கம் பார் கடையை காலி பண்ணிக் கொண்டு இருக்க, பாக்கியா ஓனரிடம் சென்று மீதி காசை கேட்கிறார். ஆனாலும் அவர் தர முடியாது என சொல்ல, அந்த இடத்திற்கு வந்த பழனி நான் கதைக்கிறேன் என பாக்கியாவை உள்ளே அனுப்புகிறார்.

அதன்பின் பார் கடை ஓனர் தானாக வந்து காசை கொடுக்க, பாக்கியா அதிர்ச்சியுடன் வாங்கிக் கொள்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்.


Advertisement

Advertisement