• Dec 27 2024

க்ரிஷ் விஷயத்தில் விஜயா, மனோஜை அதட்டி அடக்கிய ரோகிணி.. மீனா கொடுத்த ஷாக்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், ரோகினியின் மகனும் அம்மாவும் வீட்டை விட்டு கிளம்ப, விஜயா அவரை அசிங்கப்படுத்துகிறார். மேலும் இனி இங்க வராதீங்க இது ஒன்னும் மடமில்லை என்று சொல்லி, க்ரிஷின் பிறப்பை பத்தி தப்பா பேச, ரோகிணி ஆன்ட்டி என அதட்டி,  அவன் சின்ன பையன் ஏன் இப்படி பேசுறீங்க என அடக்குகிறார். அதன் பிறகு ரோகினியின் அம்மா நாங்க எதுவும் பண்ணிருந்தா மன்னிச்சிடுங்க என்று சொல்லி விட்டு செல்கிறார். 

அவர்கள் போனதும் அப்பாடா இனி ரூமுக்கு பிரச்சனை இல்லை என்று சொன்னதோடு மட்டுமில்லாமல் நான் அவர்கள் வீட்டுக்கு போனேன் அது சின்ன குடிசை. அதனால இத பாத்தா அவங்களுக்கு பைவ் ஸ்டார் ஹோட்டல் மாதிரி இருக்கும். விட்டா இன்னும் ஒரு மாசம் இருந்திருப்பாக என மனோஜ்  பேச, ரோகினி அவருக்கும் கண்டபடி திட்டுகிறார். மேலும் நீ பிறக்கும் போதே அரண்மனையிலா பிறந்த?  என்று இதனால் பேச, அவர்களுக்காக நாம ஏன் சண்டை போடணும் கடைக்கு போகலாம் வா என்று மனோஜ் கூப்பிட , நான் வரல எனக்கு பார்லர்ல வேலை இருக்கு என்று சொல்லுகிறார்.


இதைத்தொடர்ந்து க்ரிஷுக்கு கட்டவிழ்க்கும் போது ரோகிணி அங்கு சரியாக சென்று விடுகிறார். கிரிஷ் முதல் முதலாக ரோகிணியை பார்த்துவிட்டு அம்மா என கட்டிப்பிடித்துக் கொள்கிறார். இவ்வாறு இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது மீனா வந்து, என்ன ரொம்ப க்ளோசா பீலிங்கா பேசிக் கொண்டிருந்தீர்கள் என்று கேட்க, ரோகினியின் அம்மா சமாளித்து விடுகிறார்.

அதன் பிறகு முத்துவும் வந்து ஹாஸ்பிடல் பில்லை கட்டச் செல்ல, முத்து, மீனா  போனதும் ரோகிணி அவரின் அம்மாவுக்கு பேசுகிறார். ஆனாலும் மீனாவும் முத்துவும் நல்லவங்க என்று அவர் அம்மா சொல்லுகிறார்.

ஆனாலும் என்ட விஷயம் தெரிஞ்சா அவங்க கெட்டவங்க தான் என்று சொல்லுகிறார் ரோகிணி. முத்து பில்லை கட்டி வந்ததும் ஆன்ட்டி நீங்க காசு கொடுக்கிறேன் என்று சொன்னிங்களே என்று சொல்ல, ரோகிணியின் அம்மாவும் முத்துக்கு காசை கொடுக்க செல்ல, நாங்க என்ன வேற யாருமா ஒரே குடும்பம் தானே என்று முத்து சொல்வதைக் கண்டு ரோகிணி அதிர்ச்சி அடைந்து நிற்கிறார் இதுதான் இன்றைய எபிசோட்.


Advertisement

Advertisement