• Dec 25 2024

சாகுற வரைக்கும் சபதம் எடுத்த எழில்..? பாக்கியா கிச்சனில் நடந்த ரகசிய பேச்சுவார்த்தை

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், எழில் பட பூஜைகள் முடிந்த பின் பாக்கியாவை நினைத்து மன வருத்தமாக வெளியில் நின்று கொண்டிருக்க, அங்கு வந்த கோபி என்ன நல்லபடியா பூஜை முடிஞ்சுது தானே.. இப்ப என்ன யோசிக்கிறா? உங்க அம்மா வரல என்று யோசிக்கிறியா என எழிலுடன் பேசுகின்றார்.

இதை கேட்ட எழில், எல்லாம் பிளான் பண்ணி பண்ணிட்டீங்க.. எனக்கு முன்னாடியே தெரிஞ்சி இருந்தா நான் வேற முடிவெடுத்து இருப்பேன்.. இதை நான் சாகும் வரைக்கும் மறக்க மாட்டேன் என்று சொல்லுகிறார். அதற்கு கோபி,  பிரச்சனை என்றால் நான் வேண்டும் ஆனால் மற்ற விஷயம் என்றால் உங்க அம்மா வேணுமா? என எழிலுக்கு பதிலடி கொடுக்கிறார்.

இதைத்தொடர்ந்து வீட்டுக்கு போன பாக்கியாவிடம் எழிலின் பங்க்ஷன் எப்படி நடந்தது என்று ஈஸ்வரி கேட்க, தான் பங்க்ஷன்க்கு போகவில்லை ரெஸ்டாரண்டில் வேலை இருந்ததாக சொல்லுகின்றார் பாக்யா. ஆனாலும் ஈஸ்வரி துருவி துருவி கேட்டுக்கொண்டு இருக்க, நீங்க வாங்க ரெஸ்டாரண்டுக்கு போகலாம் என்று அவரை அழைத்துச் செல்கின்றார்.


அதன் பின்பு ரெஸ்டாரண்டில் ஆயுத பூஜை ஓடர் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்க முதலாவது ஓடரை ஆரம்பித்து வைக்குமாறு பாக்கியா சொல்லுகின்றார். ஆனாலும் ஈஸ்வரி மறுக்கின்றார். இதனால் கிச்சனுக்குள் இருந்த எல்லாரையும் வெளியே அனுப்பிவிட்டு செஃப், ஈஸ்வரி, பாக்யா மூன்று பேரும் ஏதோ பேசுகின்றார்கள்.

இதை அடுத்து ஈஸ்வரி எல்லாரையும் அழைத்து சாமி கும்பிட்டு ஆய்த பூஜைக்கான ஆர்டரை ஆரம்பித்து வைக்கின்றார். இந்த ஓடர் நல்லபடியா உனக்கு நடக்கும் என்று சொல்ல, செப் பார்த்து நக்கலாக சிரிக்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்

Advertisement

Advertisement