• Dec 26 2024

நடுவீட்டில் மீண்டும் குட்டையை குழப்பிய ஈஸ்வரி.. தொடர் அவமானத்தில் பாடுபடும் எழில்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், பாக்கியா கிச்சனில் இருந்து வேலை செய்து கொண்டு இருக்க, அங்கு நின்ற இனியா ஏதும் செய்து தரட்டுமா எனக் கேட்கின்றார். மேலும் அங்கு ஜெனி, அமிர்தா, ஈஸ்வரி, செல்வி என ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலை பார்க்க தானும் ஏதாவது செய்து தரட்டுமா என கேட்டுக் கொண்டிருக்கின்றார். ஆனாலும் பாக்கியா ஒன்றும் வேண்டாம் என்று சொல்லுகின்றார்.

மறுபக்கம் தனது நண்பருடன் எழில் ப்ரொடியூசர் ஒருவரை பார்க்க செல்ல, அங்கு அவர் இதுவரை என்ன செய்தீர்கள் என்று கேட்க நடந்தவற்றை சொல்லுகின்றார் எழில். இதனால் அந்த ப்ரொடியூசர் உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தும் நீங்க சரியாக பயன்படுத்தவில்லை அதனால் உங்களுக்கு நானும் வாய்ப்பு தரமாட்டேன் என எழிலை அசிங்கப்படுத்தி அனுப்புகின்றார்.


அதன்பின்பு வீட்டுக்கு வந்த செழியன் பாக்கியாவுக்கு பணக்கட்டை கொடுத்து வீட்டு செலவுக்கு வைத்துக் கொள்ளுமாறு சொல்லுகின்றார். ஆனாலும் பாக்கியா வேண்டாம் என்று சொல்ல செழியன் கட்டாயப்படுத்தி கொடுக்கின்றார். அந்த நேரத்தில் எழில் வர இதை பார்த்து கண்கலங்குகின்றார்.

இதன் போது ஈஸ்வரி இந்த வீட்டில் இரண்டு பேரும் காசு கொடுக்கிறேன் என்று சொன்னீங்க ஆனா செழியன் மட்டும் தான் கொடுக்கிறான் என்று எழிலை நடு வீட்டில் வைத்து அசிங்கப்படுத்துகின்றார். இதனால் எழில் எதுவுமே பேச முடியாமல் அழுது கொண்டே மேலே சென்று விடுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.a

Advertisement

Advertisement