• Dec 25 2024

’எதிர்நீச்சல்’ கடைசி நாள்.. குணசேகரனை தூக்கி போட்டு பந்தாட தயாராகும் ஈஸ்வரி.. வேற லெவல் வீடியோ..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த ’எதிர்நீச்சல்’ சீரியல் இன்றுடன் நிறைவு பெறுவதை அடுத்து ஈஸ்வரி கேரக்டரில் நடித்து வரும் நடிகை கனிகா வேற லெவல் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’எதிர்நீச்சல்’ சீரியலில் மதுமிதா, கனிகா, பிரியதர்ஷினி மற்றும் ஹரிப்பிரியா ஆகிய நான்கு பெண் கேரக்டர் வலிமையாக இருந்தாலும் இந்த நான்கு பேரையும் ஆட்டி வைக்கும் குணசேகரன் என்ற கேரக்டர் அனைவரையும் கவர்ந்தது என்பது தெரிந்ததே.

ஒரு குடும்பத்தில் நடக்கும் பிரச்சனை, ஆண் ஆதிக்கத்தால் பெண்களுக்கு ஏற்படும் தொல்லைகள், மனைவிகளை மதிக்காமல் இருக்கும் கணவன்கள், பெண்களின் தனிப்பட்ட ஆசைகளுக்கு மதிப்பு தெரிவிக்காமல் இருக்கும் ஆண்கள் என கதை பரபரப்பாக சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் ’எதிர்நீச்சல்’ சீரியல் இன்றுடன் முடிவடைய இருக்கும் நிலையில் இன்றைய கிளைமாக்ஸ் காட்சியை பார்க்க அனைவரும் ஆவலுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த சீரியலில் ஈஸ்வரி என்ற கேரக்டரில் நடித்திருக்கும் நடிகை கனிகா அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோக்களை பதிவு செய்து வரும் நிலையில் சற்றுமுன் அவர் வேற லெவலில் வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவில் ஒரு சிறிய பிரேக்கிற்கு பிறகு மீண்டும் வொர்க்-அவுட் செய்வதை ஆரம்பித்து விட்டேன் என்றும் ஆனால் அது அவ்வளவு எளிதாக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

நல்ல உடல் நலம் தேவை என்றால் கண்டிப்பாக ஒர்க்அவுட் செய்ய வேண்டும் என்றும் பிட்னஸ் முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளதை அடுத்து இந்த வீடியோவுக்கு பல்வேறு விதமான கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன. குறிப்பாக ’குணசேகரனை தூக்கிப்போட்டு பந்தாட இப்படி வொர்க்-அவுட் பண்றீங்களா மேடம்’ என்ற கமெண்ட் அனைவரையும் கவர்ந்துள்ளது.

நடிகை கனிகாவுக்கு தற்போது 41 வயது ஆகி வரும் ஆகிவரும் நிலையில் இந்த வயதிலும் அவர் வொர்க்-அவுட் செய்து உடலை பிட்டாக வைத்திருப்பதற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement