• Dec 27 2024

பொண்டாட்டி மேல லவ்வுனா இப்படி இருக்கனும்.. இந்து கொடுத்து வச்சவங்க போலயே..! கியூட் போட்டோஸ்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக காணப்படும் பிரேம்ஜி 45 வயது மட்டும் சிங்கிளாகவே காணப்பட்டார். இவருக்கு எப்போது திருமணம் நடக்கும்? இவரை திருமணம் செய்து கொள்ளும் பெண் யார்? என தொடர்ந்து பல கேள்விகள் எழுந்து வந்தன.

இறுதியில் தன்னை பற்றி எழுந்த கேள்விகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பிரேம்ஜி இந்து என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். முருகன் கோவிலில் இடம் பெற்ற இவர்களின் திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்களும் நண்பர்களுமே கலந்து கொண்டார்கள்.

எனினும் பிரேம்ஜி இந்துவின் திருமண ரிசப்ஷன் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சினிமா நட்சத்திரங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தார்கள்.


திருமணத்திற்கு பிறகு பிரேம்ஜி தனது காதல் மனைவியுடன் போட்டோக்களை வெளியிடுவது, அவருக்காக சமையல் வேலைகளை பார்ப்பது என்று செம க்யூட்டான வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

அந்த வகையில் தற்போது தனது காதல் மனைவி இந்துவுக்காக மீன் பொரியல் செய்து கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement