• Dec 26 2024

ஜீசஸ் கூட குடிச்சிருக்காரு...மது குடிப்பது தப்பா? தப்பில்லையா? பொது மக்களை குழப்பிய விஜய் ஆண்டனி..!

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகில் நடிகர், இசையமைப்பாளர், பாடகர், தயாரிப்பாளர், இயக்குநர் என திரைத்துறையில் பன் முகத் திறமை கொண்டு வலம் வருபவர் தான் விஜய் ஆண்டனி. 

கடந்த 2005ல் சுக்ரன் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகினார்.தொடர்ந்து நான் என்னும் படத்தின் மூலம் கதாநாயகனானார்.

தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவர், அண்மையில் தன்னுடைய மூத்த மகளை பறி கொடுத்தார். அந்த சோகத்தில் இருந்து மீண்டு வரமுடியாமல் தவிப்பதோடு தான் மீண்டும் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளதாக தெரிவித்திருந்தார். அண்மையில் தான் இவர் நடிப்பில் ரத்தம் படம் வெளியானது. அவர் நடிப்பில் ரெமியோ படமும்விரைவில் வெளியாகவுள்ளது.


இந்த நிலையில்,  மது அருந்துவதில் ஆண், பெண் என வேறுபாடு பார்க்க வேண்டாம் என விஜய் அன்டனி கூறியுள்ள விடயம் தற்போது பேசுபொருளாகி உள்ளது. 

 அதன்படி அவர் கூறுகையில், மது அருந்துவதில் ஆண், பெண் என வேறுபாடு பார்க்க வேண்டாம். ஆண் குடிப்பது தப்பு என்றால் பெண் குடிப்பதும் தப்பு தான். நான் அதை சரி என ஆதரிக்கவில்லை. அந்த காலத்தில் திராட்சை ரசம் என்ற பெயரில் இருந்தது. ஜீசஸ் கூட குடிச்சிருக்காரு. ராஜா காலத்தில் சோமபானம் என்று இருந்துள்ளது. குடி என்பது நீண்ட நாட்களாகவே உள்ளது. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வேறு வேறு பெயராக உள்ளது என்றார்.

Advertisement

Advertisement