• Dec 25 2024

என் Family -ல கூட நம்ப மாட்டாங்க.. அந்த Photo போட காரணம் இதுதான்- ஓபனாகப் பேசிய வனிதா விஜயகுமார்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை வனிதா விஜயகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அண்மையில்  தன்னை ஒரு மர்ம நபர் அடித்ததாகவும், முகத்தில் காயம் ஏற்பட்ட பீளீடிங் ஆவதாகவும் குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தார்.

"என்னுடைய பிக் பாஸ் விமர்சனத்தை முடித்தபின், இரவு உணவையும் முடித்துவிட்டு வீடு திரும்ப இருந்தேன். எனது காரை தங்கை சௌமியா வீட்டின் அருகே நிறுத்தி இருந்தேன். காரின் அருகே சென்ற போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் என்முன் வந்தார். அவர் பிக் பாஸ் பிரதீப்பின் ஆதரவாளர் ஆவார்".


"திடீரென அவர் என்னை கடுமையாக தாக்க துவங்கினார். 'ரெட் கார்டு கொடுக்குறீங்களா, நீ வேற அதுக்கு சப்போர்ட்' என கூறி முகத்தில் அடித்தார். வலியில் கத்தினேன், என் முகத்தில் ப்ளீடிங் ஆனது. அந்த நேரத்தில் என்ன சுற்றி வேறு யாருமே இல்லை, அப்போது இரவு 1 மணி இருக்கும்” என்று பதிவிட்டிருந்தார்.


இதனால் வனிதாவை அடித்த அந்த மர்ம நபர் யார் என்பதை அறிய அனைவரும் ஆவலாக இருப்பதோடு வனிதாவுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் வனிதா கண்ணில் அந்தக் காயத்தை கண்ணாடி போட்டு மறைத்துக் கொண்டு பிரபல சேனல் ஒன்றில் பேசியுள்ளார்.


அதில்,நான் போட்டோ போட்டதற்கு காரணம் யாருமே நம்பமாட்டாங்க என்று தான். என் வீட்டில இருக்கிறவங்களே நம்பமாட்டாங்க, மற்றவங்க மட்டும் என்னை நம்பனும் என்று எதிர்பார்ப்பது சரியா, அதனால தான் அடிகாயத்துடன் போட்டோ போட்டேன் என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement