• Jun 20 2025

தல- தளபதி கூட பைக்கில போன ஒரே ஆள் நான் தான்..! முக்கிய பிரபலம் ஓபன்டாக்!

subiththira / 4 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக வலம் வரும் நடிகர் பைவவ், சமீபத்தில் வழங்கிய ஒரு நேர்காணலில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தகவலைப் பகிர்ந்திருந்தார். அதன்போது, தமிழ் சினிமாவின் இரு பெரும் மாஸ் ஹீரோக்களான தல அஜித் மற்றும் தளபதி விஜய் ஆகிய இருவருடனும் பைக்கில் பயணம் செய்த ஒரே நடிகராக தன்னை விவரிக்கிறார் பைவவ்.


அவர் பகிர்ந்த இந்த அனுபவம், விரைவாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. பைவவ் அதன்போது, "கோட் படத்தில், இயக்குநர் வெங்கட் பிரபு அண்ணன், விஜயோட பைக்கில உட்கார்ந்து போக சொன்னார். அந்த Feelingஐ சொல்லவே முடியாது."


மேலும் பைவவ், "மங்காத்தா" படத்தில் அஜித் பின்னாடி இருந்தும் பைக்கில போய் இருக்கேன்." எனவும் கூறியிருந்தார். இந்த இரண்டு அனுபவங்களையும் மிகவும் உணர்ச்சிபூர்வமாக பேசியிருந்தார் பைவவ். அதுமட்டுமல்லாது,"நான் தான் தல-தளபதி கூட பைக்கில போன ஒரே ஆள்." என மிகவும் பெருமிதத்துடன் தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement