• Apr 18 2026

இன்று 6 மணிக்கு எல்லோரும் ரெடியா இருங்க.. பராசக்தி படத்தின் புதிய அப்டேட் லோடிங்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

சுதா கொங்கார இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீலங்கா, ரவி மோகன்  நடித்துள்ள பீரியட் டிராமா போராட்ட படமாக அமைந்த படம் தான் பராசக்தி. இந்த படத்தில் முதன்முறையாக ரவி மோகன் வில்லன் ஆக  மிரட்ட காத்திருக்கின்றார். அதர்வாவும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். 

பராசக்தி திரைப்படம் ஜனவரி 14-ஆம் தேதி ரிலீசாக இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக  பத்தாம் தேதிக்கு  வெளியாவதாக அதிகார்வ பூர்வமாகவே அறிவிக்கப்பட்டது.  இதனால் விஜய் நடிக்கும் ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸ் ஆவதால்  அவருக்கு போட்டியாக சிவகார்த்திகேயன் களம் இறங்கியுள்ளதாக பேசப்பட்டது. 

எனினும்  நேற்று இடம்பெற்ற ஆடியோ லாஞ்சில்  சிவகார்த்திகேயன் தன் மனம் திறந்து பேசினார்.  அதில் தான் தயாரிப்பாளர்களிடம்  ரிலீஸ் தேதியை மாற்றுமாறு கேட்டும் அவர்கள் முதலீட்டாளர்கள்  ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறியதாலயே தான் இதற்கு ஒப்புக் கொண்டதாகவும்  தெரிவித்தார். 

மேலும் இது பற்றி விஜய்யிடம் பேசிய போது, அவர்  தனக்கு வாழ்த்து சொன்னதாகவும் தெரிவித்து இருந்தார். எனவே இது அண்ணன் தம்பி பொங்கல் என உருக்கமாக பேசியிருந்தார். 

இந்த நிலையில், பராசக்தி படத்தின்  பட டிரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  நேற்று ஜனநாயகன் படத்தின் டிரெய்லர் வெளியான நிலையில் இன்றைய தினம் பராசக்தி படத்தின் டிரெய்லர் வெளியாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 


 

Advertisement

Advertisement