• Jan 09 2025

"எல்லோரும் என்னை மன்னிச்சிருங்க".. எலிமினேஷன் ஆன பிக்பாஸ் ஸ்ருதிகா போட்ட முதல் வீடியோ!

subiththira / 12 hours ago

Advertisement

Listen News!

பிரபல நடிகை ஸ்ருதிகா இந்தி பிக்பாஸ் சீசன் 18 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 90 நாட்கள் வரை இருந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த வாரம் எலிமினேஷனில் வெளியேறிய ஸ்ருதிகா தனது ரசிகர்களுக்கு வீடியோ மூலம் நன்றி தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 


தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் ஸ்ருதிகா. இவரின் குழந்தை தனமான கேரெக்டருக்கென ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். தான் இருக்கும் இடத்தினை எப்போதும் கலகலப்பாக வந்துகொள்ளும் ஸ்ருதிகா இந்த முறை தமிழ் பிக்பாஸ் வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் இந்தி பிக்பாஸ் சீசன் 18ற்கு சென்றுவிட்டார். 


தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த ஸ்ருதிகா கடந்த வார எலிமினேஷனில் வெளியேறினார். இந்நிலையில் வெளியான பின்னர் தனது ரசிகர்களுக்கு வீடியோ மூலம் நன்றி கூறியுள்ளார். அந்த வீடியோவில் " எனக்கு சப்போட் பண்ண எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப நன்றி. நாம ஊரில் இருந்து மட்டும் இல்லை அமெரிக்கா, நியூசிலாந்து என நிறைய இடத்தில் இருந்து மெசேஜ் போட்டு வாழ்த்து சொன்னாங்க அவ்வல்லோ சப்போட் கொடுத்து இருக்கீங்க எனக்கு அவ்வள்ளோ சந்தோசமா இருக்கு எப்படி சொல்லுறதுனே தெரியல ரொம்ப நன்றி" என்று கூறியுள்ளார்.


மேலும் பேசிய ஸ்ருதிகா " அப்பா ரொம்ப கஷ்ட்டப்பட்டு அனுப்பி இருக்காரு நல்லா விளையாடணும்னு தான் நான் அங்க எல்லாம் செய்தேன் என்ன பார்த்து அழுததா சொன்னாங்க உங்களை அழவச்சதுக்கு ரொம்ப சாரி.  நீங்க எல்லாரும் என்னை ரொம்ப ஹாப்பியாக்கி இருக்கீங்க உங்க எல்லாரையும் நான் ஹாப்பியாக்குவேன். எல்லாத்துக்கும் ரொம்ப நன்றி என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார் ஸ்ருதிகா.

Advertisement

Advertisement