• Jan 09 2025

என்னைய அப்செட் பண்ணாதீங்க.. சக்களத்திக்காக பாக்கியா போட்ட சண்டை?

Aathira / 11 hours ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், கோபி ஈஸ்வரி, இனியா, செழியன் கூட இருந்து சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருக்கிறார். இதனால் ஈஸ்வரி, கோபி எங்க கூட இருக்கும்போது தான் சந்தோஷமாக இருக்கின்றான் என ராதிகாவுக்கு குத்தி காட்டி பேசுகின்றார்.

இதைத்தொடர்ந்து எழிலும் அமிர்தாவும் பாக்யா வீட்டிற்கு வருகின்றார்கள். இதன்போது படப்பிடிப்பு வேலைகள் பற்றி எழிலிடம் பாக்கியா விசாரிக்கின்றார். மேலும் அங்கு வந்த கோபி, நீயும் இங்கு வந்தால் எல்லோரும் ஒன்னா சந்தோஷமாக இருக்கலாம் என்று சொல்ல, இப்போதைக்கு வர வேண்டாம் என்று பாக்கியா சொல்லுகிறார்.

அதன் பின்பு எல்லோருக்கும் சாப்பாடு செய்ய, மையூவுக்கும்  சாப்பாடு செய்ததாக ராதிகாவிடம் பாக்யா சொல்லுகின்றார். இதனால் உங்களுக்கு எதற்கு சிரமம் இனிமேல் மையூவுக்கு செய்ய வேண்டாம் என்று மையூவை கூட்டிப் போகின்றார். மேலும் ஐஸ்கிரீம் செய்ய கற்றுக் கொடுக்குமாறு மையூ கேட்க, அதையும் கட்டாயம் கற்றுத் தருகின்றேன் என்று பாக்கியா சொல்லுகிறார்.

அதன்பின் பாக்கியாவுடன் மையூ தூங்கும் போ, அம்மா இங்க வந்ததும் ரொம்ப சைலன்ட் ஆகிட்டாங்க.. அவங்க சந்தோஷமாக இல்லை என்று சொல்லுகின்றார். இதன்போது ராதிகா அங்கு வந்து மையூவை ஒரு நாள் தன்னுடன் தூங்க வைக்க விரும்புவதாக சொல்ல, தான் பாக்கியா உடனே தூங்குகின்றேன் என்று மையூ சொல்கின்றார். இதனால் ராதிகாவுக்கு முத்தம் கொடுத்து அனுப்புகின்றார் மையூ.


மேலும் கோபி ரூமுக்கு வராமல் கீழே வீட்டார்களுடன் விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்து தனியாக யோசித்துக் கொண்டுள்ளார் ராதிகா. அடுத்த நாள் ஈஸ்வரிக்கு பாக்கியா காபி போட்டு கொடுக்க அங்கு ராதிகாவும் நிற்கின்றார். இதன்போது கோபிக்கு இப்போது ஒரு வருத்தமும் இல்லை .. அவன் எங்க கூட இருக்கும்போது சந்தோஷமாக இருக்கின்றான் என்று ராதிகாவுக்கு குத்துக்கதை கதைக்கின்றார்.

அங்கு வந்த கோபிக்கு ஈஸ்வரி தனது காப்பியை கொடுக்க, அவர் காபியை கொடுத்துவிட்டு இவ்வளவு நல்லா இருக்கிறதே என்று ராதிகாவுக்கு புகழ்ந்து தள்ளிவிட்டு போகின்றான்.. ஆனால் பாக்கியா அவர் போனதும் எதற்காக இப்படி பண்ணுறீங்க? என்ன அப்செட் பண்ணாதீங்க என்று ஈஸ்வரிக்கு கண்டிக்கின்றார் . இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement