• Oct 26 2024

எல்லோரும் என்னை மன்னிச்சிடுங்க- ரெட்காட் கொடுக்கப்பட்டு வெளியேறிய பிரதீப் போட்ட எமோஷனல் பதிவு- என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

stella / 11 months ago

Advertisement

Listen News!

 உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி, அக்டோபர் 1-ஆம் தேதி 18 போட்டியாளர்களுடன் மிகவும் பிரமாண்டமாக துவங்கியது. இந்த நிகழ்ச்சி துவங்கிய நாளில் இருந்தே, ஒரு சில போட்டியாளர்கள் கன்டென்ட் கொடுக்க வேண்டும் என்பதற்காக, அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் விதமான விஷயங்களை செய்து வருகிறார்கள்.

குறிப்பாக பிரதீப், மாயா, பூர்ணிமா, போன்ற போட்டியாளர்கள் பிறர் மனதை அதிகம் நோகடித்து விளையாடி வருகின்றனர். ஆனால் பிரதீப் ஆண்டனி,  பெல் டாஸ்க் விஷயத்தில் கூல் சுரேஷ் பொய் சொன்னதாக கூறி, அளவுக்கு மீறி அவரை திட்டியது மட்டுமின்றி, பீப் போடும் அளவுக்கு தகாத வார்த்தைகள் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.


 இதனால் ஒரு கட்டத்தில், இனி பிக் பாஸ் வீட்டில் இருக்க மாட்டேன் என கூல் சுரேஷ் வீட்டை விட்டு வெளியேற, அவரை சக போட்டியாளர்கள் சமாதானம் செய்து மீண்டும் விளையாட வைத்தனர்.குறிப்பாக, ரவீனா என்னுடைய அரணாகயிறு பற்றி கமெண்ட் செய்ததாக கூறினார், பூர்ணிமா அவர் இருக்கும் இடத்தில் நைட் தூங்குவதற்கு பயமாக இருப்பதாக தெரிவித்தார்.

 அதே போல் நிக்சன் பாத்ரூம் கதவை சாத்தாமல் டாய்லெட் போய் கொண்டிருந்தார் என்றும், தன்னை மிரட்டுவதாகவும் அடுத்தடுத்து மிகவும் அதிர்ச்சியான குற்றச்சாட்டுகளை வைத்தனர். இதனால் பிரதீப் ரெட்காட் கொடுக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியேறினார். எனவே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அதில் அவர் கூறியதாவது, நான் இவ்வளவு சீக்கிரமாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவேன் என்று எதிர்பார்க்கல, நான் பண்ணுவது எல்லாம் கரெக்ட்டு என்று தான் கடைசி வரை நினைச்சிட்டு இருந்தேன்.ஆனால்  ஹவுஸ்மேட்ஸ் சொல்லும் போது தான் நான் எவ்வளவு தப்பு பண்ணியிருக்கிறேன் என்பது தெரிந்தது.


ஒவ்வொருத்தர் சொல்லும் போது நான் மாத்தியிருந்திருக்கலாம், மாத்திற மைன்ட் செட் வராததல் என்னால் மாற்ற முடியவில்லை.அதனால் தான் வெளியில் வந்திருக்கிறேன். வெளியில் வந்ததற்கு பிறகு தான் மக்கள் எனக்கு எவ்வளவு சர்ப்போட் பண்ணியிருக்கிறாங்க என்ற தெரியுது,என்னை டைட்டில் வின்னர் ஆக்கிற அளவுக்கு இருந்திருக்கிறாங்க, நான் தான் இதை கவனிக்காமல் இருந்திருக்கிறேன்.


இதுக்கு பிறகு தான் திரும்பவும் கெரியரை ஆரம்பிக்க போகிறேன். உள்ளே இருந்தவங்க யார் மேலையும் கோபமும் இல்லை வருத்தமும் இல்லை இது எல்லாம் கேமுக்காக விளையாடியது தான் என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





Advertisement