• Dec 27 2024

கோலிவுட்டில் வெட்கமே இல்லாமல் ஃபேக் சக்சஸ் பார்ட்டி.. மாஸ் காட்டும் மல்லுவுட் ! தமிழ் சினிமாவுக்கு கிடைத்த அவமானம்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

இந்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான படங்களில் அயலான், மேரி கிறிஸ்மஸ், கேப்டன் மில்லர், மிஷன் சாப்டர் ஒன் ஆகிய படங்கள் ஆரம்பத்திலேயே வெளியானது.

ஆனாலும் தனுஷின் கேப்டன் மில்லர் மற்றும் சிவகார்த்திகேயனின் அயலான் படங்கள் இரண்டும் படு தோல்வியை சந்தித்தது.

இதை தொடர்ந்து குடியரசு தின விடுமுறை மற்றும் காதலர் தினம் என அனைத்தையும் டாக்கெட் செய்து, போட்டி போட்டு தமிழ்  படங்கள் வெளியானது. ஆனால் அத்தனை படங்களும் தோல்வியை சந்திப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்த நிலையில், மலையாள சினிமாவில் தொடர்ந்தும் வெற்றிப் படங்கள் வெளியாகிக் கொண்டுள்ளது ஆனால் கோலிவுட் வெட்கமே இல்லாமல் ஃபேக்காக சக்சஸ் பார்ட்டி வைத்து கொண்டாடுகிறது என ப்ளூ சட்டை மாறன் விளாசியுள்ளார்.

மலையாளத்தில் சமீபத்தில் வெளியான ‘மஞ்சுமெல் பாய்ஸ்' திரைப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றதுடன் வசூலையும் வாரிக்குவித்து வருகிறது. 

மேலும், மம்முட்டியின் 'பிரமயுகம்', 'பிரேமலு' ஆகிய படங்களும் ஹிட் அடித்து உள்ள நிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே 3 ஹிட் படங்களை கொடுத்து மல்லுவுட் திரையுலகம் கவனம் ஈர்த்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement